Election Commission to announce Presidential election date by end July -  Breaking News | Daily Mirror

நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் 2024 ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றில் 39 வேட்பாளர்களுடன் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் பல விமர்சகர்கள், தேர்தலில் பல முக்கிய வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டியை காண முடியும் என சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளில் அரைவாசி அதாவது 50% வாக்குகளை எந்த ஒரு வேட்பாளரும் பெறுவது கடினம் என பலர் ஊகிக்கின்றனர். கிக்கின்றனர் கூட முக்கிய வேட்பாளர்கள் எவரும் பெறுவது கடினம் என்று பலர் இவ்வாறான நிலையில் 50%க்கு மேல் வாக்குகள் பெறும் வேட்பாளரை முதல் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தெரிவு செய்ய முடியாது.

இதன் காரணமாக, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரைத் தெரிவு செய்ய, இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வு எண்ணிக்கை அல்லது ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் சுற்றி பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக கணிசமான வாக்குகளைப் பெறக்கூடிய வலுவான வேட்பாளர்கள் மூன்று அல்லது நான்கு பேர் அனைவருக்கும் பட்சத்தில் ​​ இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது.

இது மறு வாக்கெடுப்பு அல்ல, மாறாக இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு விருப்பமான வாக்காளர்களைத் தவிர மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளின் மீள் எண்ணிக்கையாகும்.

ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்களிப்பது எப்படி?

வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களின் சின்னங்களின் முன் 1, 2 அல்லது 3 என தங்கள் விருப்பத்தை குறிக்கலாம். இதை வேறு வழியிலும் செய்யலாம். அதாவது, தங்களின் முதல் விருப்பத்தை அளிக்கும் வேட்பாளருக்கு 'x' என்று குறியீட்டை இட்டால் '2' என்பதை இரண்டாவது விருப்பமாகவும், '3' என்பதை மூன்றாவது விருப்பமாகவும் தெரிவிக்கலாம்.

ஒரு வேட்பாளர் முதல் சுற்றில் 50% ஐ நெருங்கும் தருவாயில் மற்றைய வேட்பாளர்களை கணிசமான சதவீத வாக்குகளினால் முன்னிலைப்படுத்தினால், இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணப்பட்டாலும் அதே வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எவ்வாறு இருப்பினும், இரண்டு வேட்பாளர்கள் முதல் சுற்றில் கிட்டத்தட்ட ஒரே சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தால் (உ+த 38% மற்றும் 40%) அத்தகைய சந்தர்ப்பத்தில் மீதமுள்ள 22% வாக்காளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை தீர்க்கமானதாக இருக்கும்.

எனவே இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எவ்வாறு சரியாகக் இடுவது என்பதை முதலில் பார்க்கலாம்.

நீங்கள் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களித்தால், அந்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தின் முன் 1 இலக்கம் அல்லது (X) எனக் குறியீட்டை இட வேண்டும். அது போதுமானதாக அமையும்.

நீங்கள் விரும்பினால், உங்கள் விருப்பத்தை இரண்டு அல்லது மூன்றாம் வேட்பாளர்களுக்கு வழங்கலாம்.

இரண்டு வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டுமென்றால் அந்த வேட்பாளர்களின் பெயர் மற்றும் அடையாளத்தின் முன்னாள் முறையே 1 மற்றும் 2 என்று குறிப்பிட வேண்டும்.

நீங்கள் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பினால் அந்த வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னத்தின் முன்னாள் உங்கள் முதல் விருப்பம், இரண்டாவது விருப்பம் மற்றும் மூன்றாவது விருப்பம் முறையே 1, 2, 3 எனே தெளிவாக எழுத வேண்டும்.

ஆனால் உங்கள் விருப்பம் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருந்தால், மேலும் நீங்கள் மூன்று வேட்பாளர்களையும் தெரிவு செய்யும் வகையில் மூவருக்கும் புள்ளடியிட்டால் (X) எழுதினால், அதாவது உங்கள் வாக்குச்சீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளை (X) எழுதினால் உங்கள் வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும்.

வாக்குச் சீட்டில் புள்ளடியிட்டு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுக்கான எண்களை குறிப்பிட்டாலும் உங்கள் வாக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும்.

வாக்குச் சீட்டில் முதலாம் வேட்பாளருக்கு 1 என இலக்கமிட்டு மற்றைய வேட்பாளர்களுக்கு புள்ளடியை வழங்கினாலும் உங்கள் வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும்.

அதேபோன்று புள்ளடிக்கு பதிலாக வேறு எந்தவொரு அடையாளங்களையும் பயன்படுத்தும் போதும் உங்கள் வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.