இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கை குறித்து முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

எந்த வேட்பாளரும் ( அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளில்) 50 சதவீதம் வாக்குகளை பெறவில்லை என்றால், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும். இது கீழே குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது, ​​வாக்காளர்கள் 1, 2, 3 ஆகிய எண்களைப் பயன்படுத்தி வேட்பாளர்களுக்கு அவர்களின் விருப்பு வாக்குகளை அளிக்கலாம். தமது வாக்குகளை செலுத்தும் போது வாக்காளர் ஒருவருக்கு மாத்திரமே தமது வாக்கை செலுத்தும் பட்சத்தில் புள்ளடி இடலாம்.

ஏ, பி, சி, டி மற்றும் இ ஆகிய ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் எனவும் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 100 என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை பின்வருமாறு அமைகின்றது என வைத்துக் கொண்டால் A= 40, B = 35, C= 15, D= 6, E= 4

இதன்படி முதல் சுற்றின் கணக்கீட்டிற்குப் பிறகு, இரண்டாவது சுற்றில் முதல் மற்றும் இரண்டாவதாக இருக்கும் ஏ மற்றும் பி இடையே மட்டுமே போட்டி நிகழும். மீதமுள்ள மூன்று C, D, E ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவர்.

முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற A மற்றும் B ஆகியோரின் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வெறுப்பு வாக்குகள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது.

15 வாக்குகள் பெற்ற C, 6 வாக்குகள் பெற்ற D, 4 வாக்குகள் E பெற்ற ஆகியோரின் வாக்குகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும்.

C யின் வாக்குச் சீட்டுகளை முதலில் கவனத்தில் கொள்ளப்படும் போது Cக்கு மாத்திரம் புள்ளடியிடப்பட்டிருந்தால், அவையும் ஒதுக்கப்படும். மேலும், 1 மட்டும் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் இருந்தால், அவையும் ஒதுக்கி வைக்கப்படும். அவர்கள் தங்கள் விருப்பத்தை வேறு வேட்பாளருக்கு தெரிவிக்காமையினால் அவ்வாறு ஒதுக்கப்படுகின்றது.

வாக்குச் சீட்டில் முதலாவது விருப்பம் C க்கும், 2வது விருப்பம் A அல்லது B க்கும் குறிக்கப்பட்டிருந்தால், A க்காகக் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் A க்காக ஒதுக்கப்பட்ட பெட்டியிலும் B க்காகக் குறிக்கப்பட்டவை B க்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்படும். (அத்தகைய வாக்குச் சீட்டுகளில் மூன்றாவது

விருப்பம் அல்லது 3 இலக்கங்களைக் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை.)

C க்கு 1 எனக் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில் D அல்லது E க்கு 2 இலக்கம் இட்டிருந்தால் அல்லது விருப்பு வாக்கை 2 என குறிப்பிட்டு இருந்தால் அங்கு 3 அல்லது முன்னுரிமை 3 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா எனச் சரிபார்த்து, 3 எனக் குறிப்பிடப்படாவிட்டால், அதுவும் ஒதுக்கப்படும். எனினும் இங்கு 2வது முன்னுரிமை D அல்லது E க்கு இருந்தாலும், 3வது விருப்பம் A அல்லது B க்கு பதிவு செய்யப்பட்டால், அந்த வாக்குச்சீட்டுகள் A மற்றும் B இன் வாக்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் இடப்படும்.

எனினும் Dக்கு 2 ஆம் முன்னுரிமையும், E க்கு 3 என குறிப்பிடப்பட்டால், E போட்டியில் இல்லை, எனவே அதுவும் ஒதுக்கப்படும். 2வது முன்னுரிமை E மற்றும் 3வது முன்னுரிமை D க்கு வழங்கினால் அதுவும் ஒதுக்கப்படும்.

எளிமையாகச் சொன்னால், Cயில் இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பம் சரியாகக் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில், A அல்லது Bக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பு வாக்குகள் காணப்படாத பட்சத்தில் அவை அனைத்தும் ஒதுக்கி வைக்கப்படும்.

எனவே இதன் மூலம் D மற்றும் E பெற்ற வாக்குகளில் 2,3 வாக்குகள் A மற்றும் B க்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப கொடுக்கப்படும் அல்லது ஒதுக்கப்பட்டு இந்த 25 வாக்குகள் A அல்லது B உடன் சேர்க்கப்படும் அல்லது புறக்கணிக்கப்படும்.

முதல் சுற்றில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்பமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை இந்தக் கணக்கீட்டின் மூலம் ஒதுக்கிக் கொள்ளப்படும்.

அப்படிப் பிரிப்பதன் மூலம், A க்கு 03 கூடுதல் வாக்குகளும், B க்கு 10 வாக்குகளும் கிடைக்கும் என்று வைத்துக் கொள்வோம். அப்போது A இன் மொத்த வாக்குகள் 43 ஆகவும் (A= 40+3 = 43) B இன் மொத்த வாக்குகள் (B = 35+10 = 45) 45 ஆகவும் இருக்கும். இப்போது செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 88 . A மற்றும் B இன் மொத்த பாக்குகளின் எண்ணிக்கை 43 + 45 = 88. இங்கு, அதில் பாதிக்கு மேல் அதாவது 45ஐப் பெறும் B இங்கு வெற்றி பெறுகிறார்.

இந்த நிலையில், செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கையை 100 ஆகக் கருத்தில் கொண்டால், அவற்றில் பாதிக்கு மேல் அதாவது 51 ஐப் பெற வேண்டிய அவசியமில்லை.

இங்கு A 8 கூடுதல் வாக்குகளையும் B 5 கூடுதல் வாக்குகளையும் பெற்றால் A = 48 மற்றும் B = 40 எனவே A வெற்றி பெறுவார்

* A அல்லது B எந்த விறுப்பு வாக்குகளையும் பெறவில்லை என்றால், A = 40, B = 35 எனவே A வெற்றியாளராக தீர்மானிக்கப்படுவார்.

* இரண்டாவது எண்ணிக்கைக்குப் பிறகும், ஏ மற்றும் பி ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றால், வெற்றியாளரைத் தேர்வு செய்ய, தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்கு சீட்டு ஒரு வாக்கை கூடுதலாகச் சேர்க்கும்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.