
INTRO
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக நாராஹென்பிட்ட Lanka Hospital இற்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விபரம் (what is the claim)
குறித்த காணொளியில் அநுராதபுரத்தில் இருந்து நோயாளி ஒருவரை நாராஹென்பிட்டிக்கு அழைத்து வந்த ஹெலிகொப்டரில் இருந்தவர்கள் யார்? என தெரிவிக்கப்பட்டு 2024.12.21 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் உண்மைத் தன்மை அறியாது பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் சுகவீனமுற்று அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை வைத்தியசாலைக்கு வந்து ஜனாதிபதி அவர்கள் நலம் விசாரித்தமை தொடர்பில் கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Link | Archived Link
இதேவேளை அநுராதபுரம் வைத்தியசாலையிலிருந்து ஜனாதிபதியின் தாயார் கொழும்பிலுள்ள Lanka Hospital இற்கு ஹெலிகொப்டரில் அழைத்துவரப்பட்டதாக கூறப்படும் காணொளியை நன்கு கவணித்த போது அந்த ஹெலிகொப்டரில் இருந்து நோயாளிகள் எவரும் இறக்கப்படுவது தொடர்பான காட்சிகளை காணக்கிடைக்கவில்லை.
அவசரகால மீட்பு உடையில் இருக்கும் ஒரு குழு மற்றும் கெமராக்கள் கொண்ட குழுவுமே அந்த காணொளியில் இருந்தமை தெளிவாக தெரிவதுடன், அது குறித்து நாம் மேற்கொண்ட ஆய்வில் இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் Lanka Hospital கட்டிடத்தில் நடத்திய ஒத்திகையின் போது எடுக்கப்பட்ட காணொளியே இது என்பதுவும் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக தீயணைப்பு மீட்புக் குழுவின் Fire Rescue Team உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த காணொளி பின்வருமாறு
இலங்கை விமானப்படையின் தீயணைப்பு பிரிவு மற்றும் மீட்பு சேவையானது, கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி லங்கா ஹொஸ்பிடல்ஸ் கோர்ப்பரேஷ் பீஎல்சி நாரஹென்பிட்ட Aerial Ladder Platform Operations, Rope Rescue Operations, Breathing Apparatus Operations மற்றும் High-Rise Building Rescue ஆகியவற்றின் செயல்விளக்கத்துடன் SLAF கூட்டுப் பயிற்சியை முதன்முறையாக நடத்தியது.
விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை மற்றும் Lanka Hospital ஊழியர்களின் பதில் திறன்களை மதிப்பீடு செய்து மேம்படுத்துவதே அவசரகால வெளியேற்றப் பயிற்சியின் முதன்மை நோக்கம் என விமானப்படை செய்திகள் தெரிவிக்கின்றன. Link
மேலும் இது தொடர்பில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை Lanka Hospital இன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் இது தொடர்பான புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.Link
விமானப்படை மீட்புக் குழு
இது குறித்து இலங்கை விமானப்படையின் மீட்புக் குழுவினரிடம் வினவியபோது,
இலங்கையில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உயிரைக் காப்பாற்றுவதற்காக விமானப்படை குழுவொன்றை வைத்துள்ளதாகவும், கடந்த 16ஆம் திகதி நோயாளிகளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு விமானங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைப் பயிற்சி இடம்பெற்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் உள்ளது என்பதைக் காட்டுவதற்காக விமானப்படையால் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பாதுகாப்பு அமைச்சு
குறித்த காணொளியானது விமானப்படையின் மீட்புக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளி என பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் கர்ணல் எம்.பி.பி. நளின் ஹேரத் உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாரா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அவர் அங்கு தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் அநுராதபுரத்தில் சிகிச்சைப்பெற்று வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் ஹெலிகொப்டரில் நாராஹென்பிட்டியில் உள்ள Lanka Hospital இதற்கு அழைத்துவரப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பரவும் காணொளி தவறானது எனவும் அது விமானப்படை மீட்புக் குழுவின் பயிற்சின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஜனாதிபதி அநுரகுமாரவின் தாயார் Lanka Hospital இற்கு அழைத்துவரப்பட்டமை உண்மையா?
Written By: Suji ShabeedharanResult: False
