INTRO :
குளிர்பானங்கள் வழியே எபோலா வைரஸ் பரவுதாக ஹைதராபாத் பொலிஸ் நிலையம் தெரிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” தயவு செய்து அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பவும், இந்தியா முழுவதும் உள்ள ஹைதராபாத் காவல்துறை மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. Maaza, Fanta, 7 Up, Coca Cola, Mountain Deo, Pepsi μπότ குளிர் பானங்கள் எதையும் அடுத்த சில நாட்களுக்கு குடிக்க வேண்டாம், ஏனெனில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அதில் எபோலா என்ற ஆபத்தான வைரஸின் அசுத்தமான இரத்தத்தை கலந்துவிட்டார். இந்த செய்தி நேற்று என்டிடிவி சேனலில் வெளியானது. இந்த செய்தியை விரைவில் முன்னனுப்புவதன் மூலம் உதவவும். இந்த செய்தியை உங்கள் குடும்பத்திற்கு அனுப்பவும். உங்களால் முடிந்தவரை இதை பகிருங்கள். நன்றி., “ என இம் மாதம் 04 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (04.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த பதிவில் தெரிவித்ததை போன்று ஹைதராபாத் பொலிஸ் நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டதா என ஆய்வினை மேற்கொண்ட போது கடந்த 2019 ஆம் ஆண்டு குறித்த போலியான தகவல் பரவிய போது இது குறித்து அவர்கள் வெளியிட்டிருந்த பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது.

குறித்த பதிவில் அவர்கள் இணையத்தில் பரவி வருகின்ற தகவல் போலியானது என்றும் தம்மால் அவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

மேலும் ஹைதராபாத் பொலிஸ் நிலையத்தின் உத்தியோகப்பூர்வ x தளத்திலும் குறித்த பதிவு இருந்தமை காணக்கிடைத்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், குளிர்பானங்கள் வழியே எபோலா வைரஸ் பரவுதாக ஹைதராபாத் பொலிஸ் நிலையம் தெரிவித்ததாக பரவும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:குளிர்பானங்கள் வழியே எபோலா வைரஸ் பரவுகிறதா?

Written By: S.G.Prabu

Result: False