INTRO :
இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான பஸ்ஸில் குறித்த திணைக்களத்தின் பெயர் ஆங்கில எழுத்து பிழையாக உள்ளது என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):



Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” புதிய திணைக்களம் ஆரம்பம்

"Irritation department "

(கசப்பான,எரிச்சலூட்டுகிற,கடுமையான, கடுப்பூட்டுகிற, கொடுமையான,கடுகடுப்பான,கசப்பு,கடுமை,எரிச்சல் திணைக்களம்) “ என இம் மாதம் 24 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு (24.12.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த புகைப்படத்தை அவதானித்த எமக்கு இது உண்மையான புகைப்படமாக என எமக்கு சந்தேகம் எழவே நாம் இதனை ஆய்வு செய்தோம்.

நாம் நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊடகப்பிரிவிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, குறித்த பஸ்லில் IRRITATION DEPARTMENT என்று எழுதப்பட்டிருந்ததா என வினவினோம்.

சமூக ஊடகங்களில் ஆங்கிலத்தில் IRRITATION DEPARTMENT என புகைப்படம் எடிட் செய்யப்பட்டு பகிரப்படுவதாகவும், உண்மையான பஸ்ஸில் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் IRRIGATION DEPARTMENT என்ற சரியாக எழுத்து பிழை எதுவும் இல்லாம் இருப்பதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊடகத்துறை அதிகாரி எமக்கு தெரிவித்தார்.

மேலும் குறித்த பஸ் நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தின் பஸ் எனவும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தின் ஹல்பதோட்டை பிரதேச இயந்திர பொறியியல் காரியாலயத்தின் இயந்திரவியல் பொறியியலாளர் S.H.K.N குணரத்ன தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு குறித்த பஸ் பழுதுபார்க்கப்பட்டதாகவும், அதன் பிறகு இதுவரை எந்தப் புனரமைப்பும் செய்யப்படவில்லை என்றும், புனரமைப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ எந்த நேரத்திலும் IRRITATION DEPARTMENT என்று குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஹல்பதோட்டை பிராந்திய இயந்திர பொறியியல் அலுவலகத்தில் பழுது ஏற்பட்டதை உறுதிப்படுத்திய அவர், 2021 இல் மேற்படி பஸ் புனரமைக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் புகைப்படங்களையும், திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி உள்ளாதாக எமக்கு குறித்த இணைப்பையும் அனுப்பினார்.

Facebook | Archived Link

பஸ் பழுதுபார்ப்பதற்கு முன்னரும் அல்லது பழுது பார்த்த பிறகும் IRRITATION DEPARTMENT என பிழையாக எழுத்துக்கள் ஒட்டப்பட்டிருந்தமைக்கான எவ்வித ஆதாரமும் எமக்கு கிடைக்கவில்லை.

இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த 63-4944 என்ற இலக்கத்தகட்டினை கொண்ட பஸ் சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த புகைப்படங்களும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

நீர்ப்பாசனத் திணைக்கள ஊழியர்கள் குழு ஒன்று, வெளியிடப்பட்ட அந்தப் புகைப்படங்களில், பேருந்தின் பின்புறத்தில் IRRIGATION DEPARTMENT என ஆங்கிலத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம் ஒழுங்காக ஒட்டப்பட்டிருப்பது காணப்பட்டது. அது IRRITATION DEPARTMENT என குறிப்பிடவில்லை.

Facebook | Archived Link

இது தொடர்பான மேலதிகமாக உறுதிப்படுத்தும் வகையில், தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமையகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 63-4944 இலக்கப் பஸ்ஸின் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றும் எமக்கு குறித்த திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

மேலே சமூகவலைத்தளங்களில் வெளியானது போல் IRRITATION DEPARTMENT என குறிப்பிடப்படவில்லை என்பது தெளிவாகிறது.

IRRIGATION DEPARTMENT என குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் கீழே உள்ளது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பஸ்ஸில் ஆங்கில எழுத்து பிழை என பகிரப்படும் புகைப்படம் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பஸ்ஸில் ஆங்கில எழுத்துப் பிழையா ?

Fact Check By: S G Prabu

Result: False