வயதான தோற்றத்தில் இருக்கும் மிஸ்டர் பீன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False

INTRO :
பலரின் மனதை கொள்ளை கொண்ட நடிகரான மிஸ்டர் பீன் வயதான தோற்றத்தில் இருப்பதை போன்று  ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

https://www.tiktok.com/@abikutty016/photo/7393388329833598215?is_from_webapp=1&sender_device=pc&web_id=7197457781896611329

சமூகவலைத்தளங்களில் “ யாருக்கெல்லாம் நம்ம Mr.Bean பிடிக்கும்👍இளமை அது போன…அது திரும்பாது….

இருக்கும் வரை நம்மை சுற்றி இருப்பவர்களையும் நாமும் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்…எல்லோருக்கும் ஒரு காலம் முதுமை வரும். “ என இம் மாதம் 13 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (13.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மிஸ்டர் பீன் என்று அழைக்கப்படுகின்ற ஹாலிவுட் பட நடிகர் ரோவன் அட்கின்சன் உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாக உள்ளது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இது குறித்து ஆய்வினை மேற்கொண்டபோது, உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவோ அல்லது வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவோ எந்த செய்தியும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. 

நாம் கூகுளில் ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson) தொடர்பாக சமீபத்தில் வெளியான செய்திகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, இம்மாதம் 13 (13.07.2024) அன்று கடந்த வாரம் பிரிட்டனில் நடந்த ஃபார்முலா 1 கார் பந்தயமான பிரிட்டிஷ் கிரான்ட் ப்ரிக்ஸ் (British Grand Prix) போட்டியைக் காண ரோவன் அட்கின்சன் வந்தார் என செய்தி வெளியாகி இருந்தமை காணக்கிடைத்தது.

மேலும் அந்த நிகழ்ச்சியில் ரோவன் அட்கின்சன் அளித்த பேட்டியை எக்ஸ் தளத்தில் வெளியாகி இருந்த இணைப்பும் கிடைத்தது. மேலும், யூடியூபில் வௌியான வீடியோவும் கிடைத்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், வயதான தோற்றத்தில் இருக்கும் மிஸ்டர் பீன் பரவும் புகைப்படம் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

இது தொடர்பாக எமது தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:வயதான தோற்றத்தில் இருக்கும் மிஸ்டர் பீன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *