உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் தமிழ் எழுத்து என ரயானி ஏர் அறிவித்ததா?

சமூகம் | Society சர்வதேசம் | International

INTRO :
உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் தமிழ் எழுத்து என மலேசியா விமான நிறுவனமான ரயானி ஏர் அறிவிப்பு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ✈️ உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் தமிழ் எழுத்து மலேஷியா விமான நிறுவனம் ரயானி ஏர் நிறுவனம் அறிவிப்பு. 

✈️ This is world’s first time that, Rayani Air has written it’s plane name in Tamil language  on the aircraft..

✈️ தாய்மொழியை புகழ்வோம். Let’s praise our mother tongue of Tamil. ..   

தமிழால் எங்கும் இணைவோம்..Let’s connect anywhere in Tamil….. “ என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (21.11.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த புகைப்படத்தில் தெரிவித்துள்ளவாறு ரயானி ஏர் என்ற விமான நிறுவனம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டோம். 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த விமான சேவை 2016 ஆம் ஆண்டு தனது சேவையினை நிறுத்தியதாக எமக்கு தகவல்கள் கிடைத்தன.


Link 1 | link 2 | link 3 | link 4

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/UURdmoS3xLw” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் வகையில் இந்த விமான நிறுவனத்தை மலேசிய வாழ் தமிழர்களான ரவி மற்றும் அவரது மனைவி கார்த்தியானி ஆகியோர் 2015ஆம் ஆண்டு தொடங்கினர் என்று செய்திகள் தெரிவித்தன.

Thehindu.com | Archived Link

சேவை தொடங்கி ஒரு சில மாதங்களிலேயே நிறுவனம் மூடப்பட்டதாகச் செய்திகள் கிடைத்தன. போதுமான நிதி ஆதாரம் மற்றும் நிர்வாகத் திறன் இல்லாத காரணத்தால் விமான சேவை வழங்க அளிக்கப்பட்ட நிபந்தனைகளை அந்த நிறுவனம் மீறியதால் அதற்கான உரிமத்தை மலேசிய விமான போக்குவரத்து ஆணையம் ரத்து செய்ததாக 2016 இல் வெளியான செய்திகள் தெரிவித்தன. 2015 டிசம்பர் 20 ஆம் திகதி தொடங்கிய சேவை ஏப்ரல் 9, 2016 இல் நிறுத்தப்பட்டது என்று தெரியவந்தது. 2016 ஜூலை 13 ஆம் திகதி இந்த விமான நிறுவனம் செயல்பட முழுத் தடை விதிக்கப்பட்டது.

இஸ்லாமிய முறைப்படி செயல்படும் விமான நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டாலும், தமிழுக்கு அதன் உரிமையாளர்கள் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டார்களா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. மேலும், அந்த விமான நிறுவனத்தின் நிறுவனர் ரவி என்பவரின் ட்விட்டர், இன்ஸ்டா பக்கங்களைப் பார்வையிட்டோம். 2016 ஆம் ஆண்டு வரை அவர் ட்வீட் செய்திருந்தார். தமிழில் பெயர் எழுதப்படும் என்று எந்த ஒரு அறிவிப்பையும் அவர் அதில் வெளியிடவில்லை. அதே போல் ரயானி ஏர் ட்விட்டர் பக்கத்திலும் அது போன்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

tamilmurasu.com.sg | Archived Link

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் தமிழ் எழுத்து என ரயானி ஏர் அறிவித்ததாக என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் தமிழ் எழுத்து என ரயானி ஏர் அறிவித்ததா?

Fact Check By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *