அர்ஜென்டினாவின் நாணயத்தாளில் மெஸ்ஸி படம் அச்சிடப்பட்டதா?

சர்வதேசம் | International விளையாட்டு | Sports

INTRO :
அர்ஜென்டினா அணித் தலைவர் மெஸ்ஸியின் புகைப்படத்தை அந்நாட்டு நாணயத்தாளில் அச்சிட ஆலோசிப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ஆர்ஜென்டினா நாணயத்தில் மெஸ்ஸியின் புகைப்படம்?

36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கிண்ண காற்பந்து தொடரில் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டினா அணித் தலைவர் மெஸ்ஸியின் புகைப்படத்தை, அந்நாட்டு நாணயத்தாளில் (ஆர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ஜென்டினாவின் நாணயமானது, ‘ஆர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது.

தினமும்உண்மையான தகவலை தெரிந்து கொள்ள எமது  WhatsApp குழுவில் இணைந்திடுங்கள்

உலகக்கிண்ண காற்பந்து தொடரில் 36 ஆண்டுகளுக்கு பின் சம்பியன் கிண்ணம் வென்ற உற்சாகத்தில் ஆர்ஜென்டினா உள்ளது. இதற்கு முன்னர் அந்த அணி 1978இல் அந்த அணி கிண்ணத்தை வென்றிருந்தது.

இதனால், ஆர்ஜென்டினா உற்சாகத்தில் மிதக்கிறது. கிண்ணத்துடன் தாயகம் திரும்பிய அணித்தலைவர் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா உள்ளிட்டோரை காண இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். வீரர்கள் திறந்தவெளி பஸ்ஸில் ஊர்வலமாக வந்தனர்.

இந்நிலையில், உலகக்கிண்ணத்தை பெற்றுத்தந்த அணித்தலைவர் மெஸ்ஸியை கௌரவிக்கும் வகையில், ஆர்ஜென்டினா நாணயத்தாள்களில் அவரது படத்தை அச்சிட அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், ஆர்ஜென்டினா பணமதிப்பின்படி 1,000 பெசோ நாணயத்தாளில் படத்துடன், 1,000 என்பதை ‘IO’ என அச்சடிக்கவும், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni)யை கௌரவிக்க, கரன்சியில், அவரது பெயரை குறிக்கும் “La Scaloneta” என்ற வார்த்தையை அச்சிடுவது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. “ என இம் மாதம் 22 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (22.12.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நடந்து முடிந்த கால்பந்து உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸியை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டு ரிசர்வ் வங்கி 1000 மதிப்புடைய பணத்தில் மெஸ்ஸியின் படத்தை அச்சிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக அந்நாட்டு மத்திய வங்கி எதும் செய்தி வெளியிட்டுள்ளதா என்று ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.

முதலில் அர்ஜென்டினாவின் மத்திய வங்கியின் (Banco Central de la República Argentina) இணையதளத்திற்குச் சென்று இப்படி ஏதும் அறிவிப்பு வெளியானதா என்று பார்த்தோம். ஆனால் அதில் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதன் சமூகவலைத்தள பக்கங்களில் பார்த்தோம். அதிலும் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் இவ்வாறு தேடுதலில் ஈடுப்பட்டிருந்த போது, உலககிண்ண கால்பந்தாட்டத்திற்காக நாணயங்கள் வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதிலும் மெஸ்ஸின் உருவப்படம் இருக்கவில்லை. கால்பந்தை உதைப்பது போன்று 5 மற்றும் 10 பெசோ நாணயங்கள் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதுவும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்குதவற்கு ஓராண்டுக்கு முன்பாக (2021ம் ஆண்டில்) வெளியிட்டிருப்பது தெரிந்தது. கடைசியாக 2022 மே மாதம் புதிய நாணயத்தாள்களை அந்நாட்டு மத்திய வங்கி வெளியிட்டிருப்பதும் தெரிந்தது.

bcra.gob.ar | Archived Link

மேலும் எமது தேடலின் போது, அந்நாட்டு ஃபேக்ட் செக் ஊடகங்கள் வெளியிட்டிருந்த கட்டுரைகள் நமக்குக் கிடைத்தன. 

குறித்த கட்டுரைக்கு அமைய சமூகவலைத்தளங்களில் பரவி வரும் இந்த தகவல் குறித்து அர்ஜென்டினா நாட்டின் மத்திய வங்கி ஊடகப் பிரிவு நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கேட்டதாகவும், மெஸ்ஸியை கௌரவிக்கும் வகையில் 1000 நாணயத்தாளில் மெஸ்ஸின் புகைப்படத்தை அச்சிடுவது பற்றி எந்த ஒரு தகவலும் தங்களுக்கு வரவில்லை. அப்படி ஆலோசனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அப்படி எந்த ஒரு யோசனையும் இல்லை, ஆய்வு செய்யவும் இல்லை. 

மேலும் மெஸ்ஸி புகைப்படத்துடன் கூடிய புதிய 1000 நாணயத்தாள் மாதிரி எதையும் மத்திய வங்கி வெளியிடவில்லை” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும், யாரோ போலியாக உருவாக்கிய நாணயத்தாள் என தெரிவித்திருந்தமை காணக்கிடைத்தது.

chequeado.com | bloomberglinea.com 

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அர்ஜென்டினாவின் நாணயத்தாளில் மெஸ்ஸி படம் என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:அர்ஜென்டினாவின் நாணயத்தாளில் மெஸ்ஸி படம் அச்சிடப்பட்டதா?

Fact Check By:  S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *