மெசேஜ் ஷேர் செய்தால் 10 பைசா கிடைக்குமா?

இலங்கை செய்திகள்

எனக்கு இதயப் புற்று நோய் உள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய 6 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஷேருக்கும் 10 பைசா எனக்கு கிடைக்கிறது என பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 

Saravana L என்ற பேஸ்புக் கணக்கில் “pls share pannunga  0771926984 என் பெயர் *NIROSA* Kandy perathene university நான் M.B.A (3year) படிக்கிறேன். எனக்கு இதயப் புற்று நோய். அறுவை சிகிச்சை செய்ய ரூ. 6 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவ்வளவு பணம் என்கிட்ட இல்லை. நீங்கள் எனக்காக பணம் அனுப்பவேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு

Share மட்டும் தான். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஃசேர் க்கும் 10 பைசா எனக்கு கிடைக்கிறது.

தயவு செய்து இந்த மெசேஜ்-ஐ ஜோக் என்று நினைத்தால் மேலே இருக்கும் என் பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.

தயவு செய்து 🙏 உதவி செய்யுங்கள்.

*மனசாட்சி இருந்தால் மட்டும் பகிருங்கள்*என்று கடந்த 13 ஆம் திகதி (13.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள குறித்த பதிவிலிருந்த கமென்டுக்களை பார்வையிட்டோம்.

அதில் சிலர் குறித்த பதிவானது போலியென தெரிவித்துள்ளனர்.

நாமும் முதலில் குறித்த தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அப்போது குறித்த தொலைபேசி இலக்கமானது போலியானது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கையில் பணப்பாவணையில் பைசா என்ற வார்த்தை உபயோகிக்கப்படாது. அதற்கு பதிலாக சதம் என்றே உபயோகிப்பது வழக்கமாகும்.

பைசா என்பது இந்தியாவில் உபயோகிக்கப்படும் மொழி நடையாகும்.

தொடர்ந்து நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள குறித்த புகைப்படத்தினை கொள்ள குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி அப்பதிவில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படத்தினை ஆய்விற்கு உட்படுத்தினோம்.

குறித்த தேடலின் போது,சுஜன் என்பரை மைலோயிட் லுகேமியா நோயிலிருந்து காப்பாத்த உதவுங்கள் என்று millap.org என்ற அமைப்பில் நிதி திரட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை காணக்கிடைத்தது.

Millap.org  என்ற அமைப்பானது இந்தியாவில் இயங்கும் நிதி திரட்டும் இணையத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த இணையத்தளத்தின் உதவியுடன் 17 வயது நிரம்பிய சுஜன் என்பவரின் தாயார் சன்ஜீவா, தனது மகனின் மருத்துவ உதவிக்காக நிதியினை திரட்டியுள்ளார்.

மேலும் கடந்த மாதம் 29 ஆம் திகதி (29.10.2019) அன்று வெற்றிகரமாக சத்திரசிகிச்சையினை மேற்கொண்டுள்ளதாகவும், இன்னும் 3 மாதங்களில் தனது மகன் முழுமையாக குணமடைந்து விடுவார் என கடந்த 7 ஆம் திகதி (07.11.2019) பதிவினை மேற்கொண்டுள்ளார்.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மெசேஜ் ஷேர் செய்தால் 10 பைசா கிடைக்கும் என வெளியான தகவல் முற்றிலும் போலியானது.

Avatar

Title:மெசேஜ் ஷேர் செய்தால் 10 பைசா கிடைக்குமா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *