உலகில் நீண்ட கழுத்து கொண்ட மனிதன் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

False சர்வதேசம் | International

INTRO :
உலகில் நீண்ட கழுத்து கொண்ட மனிதன் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “உலகில் நீண்ட கழுத்து கொண்ட மனிதன் ஆபிரிக்கா 1890.

1890

Longest neck family in the world “ என இம் மாதம் 06 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (06.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் இந்த புகைப்படம் பற்றி நன்கு அவதானித்த போது, அதில் சில மனிதர்களில் உடல் உறுப்புகள் முழுமையடையாமல் இருப்பது காணக்கிடைத்தது.

A group of people standing in front of a log cabin

Description automatically generated
A group of people standing in front of a house

Description automatically generated
A group of people with long necked heads

Description automatically generated

இதனை நாம் மேலும் உறுதிசெய்ய செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதா என கண்டறிய  Hive Moderation என்ற செயற்கை நுண்ணறிவை கண்டறியும் இணையத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வினை மேற்கொண்டோம்.

அதில் குறித்த புகைப்படங்கள் 99.9% செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

குறித்த புகைப்படங்களை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, funnyaipics என்ற டிக்டொக் கணக்கில் கடந்த வருடம் நவம்பர் மாதம் குறித்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. மேலும் குறித்த டிக்டொக் கணக்கு செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்படும் காணொளிகளை உள்ளடக்கியிருந்தமையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

A screenshot of a social media account

Description automatically generated

உலகில் நீளமான கழுத்தினை கொண்ட நபராக தாய்லாந்து நாட்டினை சேர்ந்த PADAUNG WOMEN என்ற பெண் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், உலகில் நீண்ட கழுத்து கொண்ட மனிதன் என பரவிய புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:உலகில் நீண்ட கழுத்து கொண்ட மனிதன் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *