
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டம் கடந்த 16 ஆம் திகதி (16.10.2019) பலாங்கொடையில் நடைப்பெற்றது.
குறித்த கூட்டத்தின் போது இலங்கை தேசிய கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை குறிக்கும் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் அகற்றப்பட்ட கொடி ஏந்தியதாக பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன.
இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Kalmunai today news என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று (16) #பலாங்கொடையில் #கோத்தாபாய #ராஜபக்ஷவுடைய மாபெரும் கூட்டத்தின் போது எமது நாட்டின் தேசிய கொடியை பாருங்கள்.
மீண்டும் மீண்டும் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும், எதிராக இந்த இணவாதிகளின் செயல்
இந்த இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டும்மா…?
இம்முறையும் இந்த இனவாதிகளுக்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிப்போம்..” என்று கடந்த 16 ஆம் திகதி (16.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் கோட்டபாயவின் பலாங்கொடை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த Comments ஐ நாம் தேடுதலுக்கு உட்படுத்தினோம்.


அதில் பலர் குறித்த கொடியில் பச்மை மற்றும் செம்மஞ்சள் ஆகிய இரு நிறங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த புகைப்படத்தினை நாம் பார்க்கும் போது அதில் இலங்கை கொடி மடிந்திருப்பதினை நாம் காணலாம்.
மேலும் நாம் அன்று பலாங்கொடையில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியினை ஆய்வு செய்த வேளையில்,

குறித்த காணொளியில் மூலம் சரியான இலங்கை தேசிய கொடியினை தான் கோட்டபாய ராஜபக்ஷவின் கூட்டத்திற்கு வந்த ஆதரவாளர்கள் ஏந்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் பலாங்கொடையில் கோட்டபாய ராஜபக்ஷ கூட்டத்தின் போது இலங்கை கொடியில் மாற்றம் என வெளியான புகைப்படம் எவ்வித உண்மையும் இல்லை.

Title:பலாங்கொடையில் கோட்டபாய ராஜபக்ச கூட்டத்தின்போது இலங்கை கொடியில் மாற்றமா?
Fact Check By: Nelson ManiResult: False
