The Moment, Opportunity and the Possibility for Change – Groundviews

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 876,469 என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கையை விட 876,469 பேர் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆனைக்குழு கடந்த திங்கள் அன்று அறிவித்திருந்தது.

தற்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகவும், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவ் எண்ணிக்கை 15,992,096 ஆகவும், 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 16,263,885 ஆகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல புதிய வாக்காளர்கள் தொழில்நுட்ப ஆர்வமுள்ள குழுக்கள் என்பதால் அவர்களின் வாக்களிப்பு முறையானது சமூக ஊடகங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது முதலாவது வாக்கினை வழங்கவுள்ள வாக்காளர்களை கவர்ந்திட வேண்டும் என்பதற்காக சில அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சாரங்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.

1948 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து வேறுபட்ட பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட இரண்டு பிரதான அரசியல் குழுக்களினால் இலங்கை ஆளப்பட்டு வருவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்தாதது மற்றும் முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடி காரணமாக இளைஞர்கள் மத்தியில் அரசியல் குறித்து சில விமர்சனங்கள் உள்ளமையும் இங்கு மிக முக்கிய விடயமாக கருதப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இம்முறை தேர்தலில் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்றனர்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.