
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கட்டில் இடி விழுந்ததாக ஒரு காணொளி இணையத்தில் பரவி கொண்டுள்ளது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

ECHO Tamil News என்ற பேஸ்புக் பக்கத்தில் “கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறை அணைக்கட்டில் இருந்து வரும் ஆற்றில் வில்லுக்குறி அருகில் தண்ணீரில் இடி விழுவதை பாருங்கள்!
CCTV captured.
By Nanjil Asokan. “ என்று கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அதில் ஒரு வீடியோவும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடுதலினை மேற்கொண்டோம்.

குறித்த தேடலின் போது இந்த காணொளியானது 2012 ஆம் ஆண்டு இணையத்தில் முதல் முதலாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இது Rannikon Metrityo என்ற யூடியுப் அலைவரிசையில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும், அதில் நீர்நிலையின் ஆழத்தினை அதிகரிக்கும் பணி என அவர்கள் குறிப்பிட்டுள்ளமையும் காணக்கிடைத்தது

Rannikon Merityo என்ற நிறுவனம் பின்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனமாகும்.

மேலும் குறித்த வீடியோவினை ஆய்வு செய்யும் போது,

குறித்த வீடியோவின் Comments பகுதியில் பலர் குறித்த வீடியோ தவறாக சிலர் மின்னல் தாக்குதல் என பதிவேற்றம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
அதற்கு குறித்த வீடியோவின் உரிமையாளர் இது நமது வேலைத்திட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வீடியோவை நாம் ஆய்விற்கு உட்படுத்தினோம், அதன் வேகத்தினை (0.25x) குறைத்து ஆய்வு செய்த போது, தீ போன்ற ஒன்று நிலப்பகுதியிலே இருந்து வருவதை நாம் கவணிக்கலாம்.
மின்னல் தாக்குதல் வானில் இருந்து தான் நிலத்தை தாக்கும் எனவே குறித்த வீடியோ நீர் மட்டத்தினை ஆழமாக்கும் பணியின் போது எடுக்கப்பட்டது என உறுதி செய்யலாம்.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பேச்சிபாறை அணைக்கட்டில் இடி விழுந்ததாக வெளியான காணொளியானது 2012 ஆம் ஆண்டு ஃபின்லாந்து நிறுவனம் நீர்நிலை ஒன்றின் ஆழத்தை அதிகரிக்கும் பணியின் போது எடுக்கப்பட்ட காணொளியாகும்.