
கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் ஜனாதிபதிகள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தினை கொண்ட புகைப்படம் ஒன்று பேஸ்புகில் பகிரப்பட்டு வருவதை காணக்கிடைக்கின்றது.
தகவலின் விவரம்:

Ceylon Magazine என்ற பேஸ்புக் பக்கத்தில் ”கடந்த தேர்தல்களில் ஜனாதிபதிகள் பெற்ற வாக்குகள் சதவீதம்” என்ற பதிப்போடு இலங்கை ஜனாதிபதிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்கு சதவீதங்கள் இடப்பட்ட புகைப்படம் ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பதிப்பானது கடந்த 11 ஆம் (11.09.2019) அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிவில் பதியப்பட்ட Comments-ஐ நாம் ஆராய்ந்தோம். அதில் பிழையான தகவலை பரப்பவேண்டாம் என பதிவேற்றியுள்ளார்.

மேலும் இது குறித்து ஆய்வினை நாம் மேற்கொண்டவேளையில் குறித்த பதிப்பில் உள்ள சில புள்ளிவிபரங்கள் சரியானதாகவும்,1982,1988,1994 மற்றும் 2010 ஆகிய வருடங்களில் தரப்பட்டுள்ள சதவீதங்கள் பிழையானவை என்று கண்டறியப்பட்டது.
தேர்தல் பெறுபேறுகளை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையகத்தினையும் சில இணையத்தளங்களையும் பரீசிலனை செய்தோம்.
அதில் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர்.ஜயவர்த்தன 57.02% வாக்குகளை பெறவில்லை மாறாக 52.91% வாக்கே உண்மையானதாகும்

மேலும் 1988 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச அவர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதம் 57.11% இல்லை மாறாக 50.43% என்பதே உண்மையாகும்.

இதுபோன்றே 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வென்ற சந்திரிக்கா குமாரத்துங்க அவர்கள் பெற்ற சதவீதமாக பதியப்பட்டுள்ள 56.02% என்பது பிழையான புள்ளிவிபரம் என்பதோடு அது 62.28% ஆக பதியப்படவேண்டும்.

இந்த வாக்கெடுப்புகளின் முடிவுகளை உறுதிப்படுத்த சில பத்திரிகைகளின் அறிக்கைகளையும் நாங்கள் கவனித்தோம், இது தேர்தல் முடிவுகள் மற்றும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள முடிவுகள் சரியானவை என்பதை உறுதிப்படுத்தியது.

Daily News Article | Archived Link
1999 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் வென்ற வேட்பாளரின் தேர்தல் முடிவுகளை ஒப்பிடுகையில், தேர்தல் ஆணையத்தின் இணையத்தளம் மற்றும் பத்திரிகை அறிக்கைகளுடன் ஒத்தவையாக அமைந்துள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் இணையத்தளம் மூலம் 2010 இல் வெற்றி பெற்ற வேட்பாளரின் சதவீதத்தை ஆராய்ந்து அதை மற்ற ஊடக அறிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த சதவீதங்களும் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அக்காலகட்டத்தில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளை ஆராய்ந்த வேளையில், 2010 இல் வெற்றி பெற்ற வேட்பாளரின் சதவீதம் 61.80% அல்ல 57.88% ஆக இருக்க வேண்டும் என்று கண்டறியப்பட்டது.

Daily News Web Link | Archived Link

Wikipedia Link | Archived Link
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படத்தில் 2015 ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளைப் பார்க்கும்போது, அது சரியானதாக பதியப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகளில் 1982,1988,1994 மற்றும் 2010 ஆகிய வருடங்களில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி தேர்தல் வாக்குகளின் சதவீத தரவுகள் பிழையானதோடு,1999,2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் குறிக்கப்பட்டுள்ள முடிவுகள் சரியானவையாகும்.

Title:கடந்த தேர்தல்களில் ஜனாதிபதிகள் பெற்ற வாக்கு சதவீதம் உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: Mixture
