
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் வருகின்ற 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
குறித்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவினால் காலி மாவட்டத்தில் அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் தொகையினர் என சில புகைப்படங்கள் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது.
இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள திட்டமிட்டோம்.
தகவலின் விவரம்:

Nisath Almass என்ற பேஸ்புக் கணக்கில் “காலி மாவட்ட அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸவுக் கூடிய மக்கள் 💪 “ என்று இம்மாதம் முதலாம் திகதி (01.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் குறித்த பதிவேற்றத்தில் கலந்த கொண்ட மக்களின் புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு மேற்கொண்ட ஆய்வில்,
முதலில் அதிலிருந்த மூன்று புகைப்படங்களையும் Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடலில் ஈடுப்பட்டோம்,
முதலாவது புகைப்படம்


இரண்டாவது புகைப்படம்


மூன்றாவது புகைப்படம்


நமது ஆய்வின் அடிப்படையில் குறித்த மூன்று புகைப்படங்களும் கடந்த வருடம் (2018) ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது எடுக்கப்பட்டவை என கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாம் மேற்கொண்ட ஆய்வில்,
காலி மாவட்ட அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸ இம்மாதம் முதலாம் திகதியன்று நடந்த பிரச்சார கூட்டம் அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் இடம்பெற்றது இரவு 8 மணியளவில் ஆனால் பேஸ்புக்கில் பதியப்படும் புகைப்படங்கள் நண்பகலில் எடுக்கப்பட்டவை ஆகும்.

குறித்த வீடியோவில் அங்கிருந்த மக்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது,
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில். காலி மாவட்டத்தில் அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸவுக் கூடிய மக்கள் என வெளியான புகைப்படம் 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெளிவாகிறது.

Title:அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸவுக் கூடிய மக்களா இது?
Fact Check By: Nelson ManiResult: False