
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து பெண் புஷ்பா கோலி. இவர் சிந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் சிந்து மாகாணத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தகவலின் விவரம்:
குறித்த செய்தியில் புஷ்பா கோலியாக ராணுவ உடையில் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகின்றது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த புகைப்படத்தினை google reverse image உபயோகித்து பரிசோதனை செய்தவேளையில் 2017 ஆம் குறித்த படம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

மேலும், தேடுதலில் ஈடுப்பட்ட வேளையில், 2017 ஆம் ஆண்டு அக்டோம்பர் மாதம் 25 ஆம் திகதி துர்கனி பானூரி என்ற போர் வீராங்கனை முதல் முதலாக பெண் இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்ட வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். முழு அறிக்கை

இது குறித்து மேலும் ஆய்வு மேற்கொண்டவேளையில் புஷ்பா கோலி என்ற பெண் சிந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை உண்மையென கண்டறியப்பட்டது.
டுவிட்டரில் இது குறித்த கருத்து வெளியிட்டிருந்த மனித உரிமைகள் ஆர்வலர் கபில் தேவ் என்பரே முதல் முதலில் பதிவேற்றம் செய்திருந்தார்.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து பெண்ணான புஷ்பா கோலி, துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள குறித்த புகைப்படமானது,2017 ஆம் ஆண்டு அக்டோம்பர் மாதம் 25 ஆம் திகதி துர்கனி பானூரி என்ற போர் வீராங்கனை முதல் முதலாக பெண் இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்ட வேளையில் அவர் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
