‘ஈபெல் கோபுரத்தில் தீ’  என பரவும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உண்மையா?

False சர்வதேசம் | International

INTRO :
ஈபெல் கோபுரத்தில் தீ பிடிப்பு என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


tiktok Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ஈபெல் கோபுரத்தில் தீ “ என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (21.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் ஈபெல் கோபுரத்தில் தீ விபத்து தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என நாம் ஆய்வு மேற்கொண்டபோது, அவ்வாறான எவ்வித செய்தியும் கிடைக்கப்பெறவில்லை.

மேலும், ஈபெல் கோபுரத்தின் உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, அதிலும் தீ விபத்திற்கான அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

X.com | Instagram | Facebook

மேலும் நாம் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது, Augmented One என்ற யூடியுப் பக்கத்தில் குறித்த வீடியோ VFX பயன்படுத்தி, தயார் செய்யப்பட்டதாகக் கூறி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஈபெல் கோபுரத்தில் தீ பிடிப்பு என பரவும் வீடியோ போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:‘ஈபெல் கோபுரத்தில் தீ’ என பரவும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உண்மையா?

Written By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *