இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா?

False சர்வதேசம் | International
Subscribe to our WhatsApp Channel


INTRO :

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் வைத்து தாக்கப்பட்டார் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “இவன் இன்னும் சாகவில்லையா..? நெதன்யாகுவை கீழே தள்ளி அடித்த இஸ்ரேல் சகபாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றதில் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும்  கடுமையாக  அடி வாங்கினான் நெட் தன்யாஹூ..என்னா அடி.. தெரியுமா..‼️ “என கடந்த மாதம் 06 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (06.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் வைத்து தாக்கப்பட்டிருந்தால் அது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டிருக்கும் நாம் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது அவ்வாறான செய்திகள் எதுவும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.

ஆகவே குறித்த காணொளியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்திய போது,On Demand News என்ற யூடியுப் பக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றது.

அதில் பல்கேரியா நாட்டில் நடந்த தொலைக்காட்சி மாநாட்டில் நுழைந்த துப்பாக்கிதாரிகள் தாக்குதல் என தலைப்பிட்டிருந்தமையை காணக்கிடைத்தது.

மேலும் இது தொடர்பாக  நாம்  ஆய்வினை மேற்கொண்ட நிலையில் AP News  யூடியுப் தளத்திலும் குறித்த நிகழ்வு பதிவாகியிருந்தமை காணக்கிடைத்தது. 

அதில் “சனிக்கிழமையன்று தலைநகர் சோஃபியாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் துருக்கிய சிறுபான்மைக் கட்சித் தலைவர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​அவரை நோக்கி கண்ணீர் புகைக் குண்டு வீசும் துப்பாக்கியை நீட்டிய நபர் பல்கேரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் மேலும், துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்படவில்லை.” என பதிவிட்டிருந்தமையை காணக்கிடைத்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றது. 

Link | Link | Link 

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டார் என பரவும் காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *