
இலங்கை நாட்டின் தற்போதைய நீதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் அலி சப்ரியின் மனைவி தற்போது இஸ்லாமிய கலாசாரத்தினை மறந்துவிட்டதாக, ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Mail Online.LK என்ற பேஸ்புக் கணக்கில் ” இப்படி மாறிட்டாங்க அமைச்சர் அலி சபரி பொண்டாட்டி வேதனைக்குரிய செயல்” என்று கடந்த மாதம் 24 ஆம் திகதி (24.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக நாம் நீதி அமைச்சரான அலி சப்ரியின் செயலாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, குறித்த காணொளி அலி சப்ரியின் பதவியேற்பின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதை உறுதி செய்தார்.
மேலும் குறித்த காணொளியில் நீல நிற சாரி அணிந்து அலி சப்ரி கையொப்பம் இடம் போது அவர் அருகில் இருந்தவரே அவரின் மனைவி என்பதோடு, குறித்த காணொளியில் மத ஆராதனையின் போது அவரின் பின் பக்கத்தில் இருந்தவர் குறித்த நிகழ்விற்கு சமூகமளித்த ஒருவர் என்றும், அவருக்கும் அலி சப்ரியிற்கு எவ்விதமாக இரத்த பந்தமும் இல்லை என அவர் தெரிவித்தார்.

குறித்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளது போன்று அலி சப்ரியின் மனைவி மாறி விட்டாரா என்று நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, 2012 ஆம் ஜனாதிபதி சட்டதரணியாக நியமனம் பெற்றதை கொண்டாடும் முகமாக மேற்கொண்டிருந்த விருந்து உபசார நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் எமக்கு காணக்கிடைத்து.
அதிலும் அலி சப்ரியின் மனைவி தற்போது உள்ளவாரே சமூகமளித்திருந்தார்.

இதற்கமைய அலி சப்ரியின் மனைவி மாறிவிட்டதாக வெளியான வீடியோ அவரின் பதவியேற்பு வைபவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவாகும்.
மேலும், அதில் முதலில் காட்டப்படும் பெண் குறித்த நிகழ்விற்கு சமூகமளித்திருந்த ஒரு பெண் என்பதோடு, அவர் அலி சப்ரியின் மனைவி இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அலி சப்ரியின் மனைவி என்று கூறி வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை இணைத்து, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று தெளிவாகிறது.

Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.