
சிலை நம்பிக்கைக்கும், உண்மையான இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என இரு காணொளிகள் இணைக்கப்பட்ட வீடியோ ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Mail Online.LK என்ற பேஸ்புக் பக்கத்தில் ” சிலை நம்பிக்கைக்கும்,உண்மையான இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம்.” என்று கடந்த மாதம் 17 ஆம் திகதி (17.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

இரு வீடியோக்களை இணைத்து உருவாக்கப்பட்ட குறித்த வீடியோவில் ஒரு குரல் பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதில் குறித்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றதாகவும், அதில் இம்மான் தொழுகையினை விட்டு செல்லாமல் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இருந்தும் குறித்த வீடியோவில் தலைப்பில் சிலை நம்பிக்கைக்கும்,
உண்மையான இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம். என்ற பதிவோடு, 46 செக்கனில் ஓட்டம் பிடித்த கிறிஸ்தவர் என்ற ஒரு பதிவும் அதில் பதியப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் இருந்த இரு வீடியோவிருந்து தனி தனியே புகைப்படங்களை எடுத்து Google Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.
அதற்கமைய கிறிஸ்தவ குருவாளர் இருந்த வீடியோ லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக இணையத்தில் வெளியான செய்திகள்,
தொழுகையில் ஈடுபட்டிருந்த இம்மானின் புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி தேடிய போது, இது இந்தோனேசியாவில் எடுக்கப்பட்ட காணொளி என உறுதி செய்யப்பட்டது.
நாம் மேற்கொண்ட தேடுதலில் சிலை நம்பிக்கைக்கும், உண்மையான இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ற தலைப்பில் இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரு சம்பவங்களை ஒன்றிணைத்து இவர்கள் தவறான கருத்தினை மக்களுக்கு தெரியப்படுத்துவதாக, கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இந்த 2 வீடியோவும் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Nelson ManiResult: Partly False