இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 1000 ரூபாய் இதுவா?

False இலங்கை செய்திகள்

இலங்கையில் புதிதாக வெளியிடப்பட்ட 1000 ரூபாய் என ஒரு புகைப்படம்  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Puttalam News-புத்தளம் செய்திகள் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” அறிமுகப்படுத்தப்பட்டது புதிய 1000 ரூபாய்

புதிய 1000 ரூபாய் காசை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு மத்திய வங்கியின் ஆளுனர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இன்று (24) வழங்கினார்.

பிரதமருக்கும் மத்திய வங்கியின் ஆளுனருக்கும் இடையே விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து மத்திய வங்கி ஆளுனருடன் ஒரு நல்ல கலந்துரையாடலை மேற்கொண்டதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது”  என்று இம் மாதம் 25 ஆம் திகதி  (25.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக  ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த தேடலின் போது, நாம் இலங்கை மத்திய வங்கியின் பிரதான அதிகாரியை தொலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு இது தொடர்பாக வினவியபோது,

புதியதாக 1000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்படவில்லை எனவும், தற்போது பாவணையில் உள்ள 1000 ரூபாய் நாணயத்தாளில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை என்பதோடு, மத்திய வங்கியின் ஆளுநர் அல்லது நிதியமைச்சரை மாற்றிய பின்னர், புதிய நாணயத்தாள்களில் புதிய கையொப்பங்களுடன் வெளியாகும் முதலாவது நாணயத்தாளை சம்பிரதாய முறையில் காட்சிப்படுத்தல் பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்வு என்று தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்ட டபிள்யூ.டி லட்சுமன் மற்றும் புதிய நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் கையொப்பங்களுடன் புதிய 1000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டதாகவும், சமூக வலைத்தளங்களில் பச்சை நிறத்தில் பகிரப்படும் புகைப்படம் குறித்த நாணயத்தாளை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அட்டை கவர் என்று அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

நாம் இது குறித்து மேலும் மேற்கொண்ட சோதனையில், Ada.lk செய்தி இணையத்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி விவரம் இதோ.,

Archived Link

1000 ரூபாய் நாணயத்தாள் மற்றும் அதற்காக தயாரிக்கப்பட்ட கவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக இணையத்தளங்களில் வெளியாகியிருந்த செய்திகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Link 1 | Link 2 | Link 3

மேலும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரவி கருணாநாயக்க நிதிஅமைச்சராகவும், அர்ஜுன் மஹோந்திரன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் இருக்கும் போது அவர்களின் கையொப்பங்களுடன் புதிய நாணயத்தாள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் 2018 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து 70 வருட நிறைவையொற்றி அப்போது நிதியமைச்சராக இருந்தி மங்கள சமரவீர மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த இந்திரஜித் குமாரசாமி அவர்களின் கையொப்பம் இடப்பட்ட 1000 ரூபாய் நாணயத்தாள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

dailymirror.lk

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஞாபகார்த்த நாணயத் தாள்களும் குத்திகளும் | சுற்றோட்டத்திலுள்ள நாணயத் தாள்கள்

எமது சிங்கள பிரிவினரின் ஆய்வு அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் புதிதாக வெளியான 1000 ரூபாய் நாணயத்தாள் எனக் கூறி அதற்கு பயன்படுத்தப்பட்ட கவரை பகிர்ந்து வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 1000 ரூபாய் இதுவா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *