ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க கடற்படைத் தளம் சேதம் என பரவும் காணொளி உண்மையா? 

Misleading சர்வதேசம் | International

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஜக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளங்களுக்கு சேதம் என தெரிவிக்கப்பட்டு, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்

ஈரான் ஏவுகணை தாக்குதல் – UAEயில் அமெரிக்க கடற்படை தளங்கள் சேதம்! என தெரிவிக்கப்பட்டு 2026.05.27 ஆம் பகிரப்பட்டிருந்தது.

மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மத்திய கிழக்கு போர் நிலைமைகள் தொடர்பில் அண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்த செய்திகள் சர்வதேச ஊடங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் காணகிடைக்கவில்லை.

எனவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, 2025. 11.25 ஆம் திகதி இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

அதனடிப்படையில் நாம் இந்த காணொளி குறித்து தொடர்ந்து ஆராய்ந்த போது அதில் துபாயின், உம் ரமூலில் (Umm Ramool) உள்ள கிடங்கு ஒன்றில் 2025.11.25 ஆம் திகதி இரவு  தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, துபாய் குடிமைத் தற்காப்புப் படை (Dubai Civil Defence)  விரைந்து செயல்பட்டு, 40 நிமிடங்களுக்குள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.

இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மீட்புக்குழுவினரின் அதிவேக நடவடிக்கையால் நிலைமை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த காணொளி நவம்பர் 25, 2025 அன்று மற்றொரு ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Facebook Link  

2025 ஆம் ஆண்டு  உம் ரமூலில் இடம்பெற்ற இந்த தீ விபத்து தொடர்பில் அப்போது துபாய் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Link | Link

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலின் காணொளி என பகிரப்படும் காணொளியானது, தவறாக வழிநடத்தும் வகையில் பகிரப்பட்டுள்ளதுடன், அது 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துபாயின், உம் ரமூலில் உள்ள கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க கடற்படைத் தளம் சேதம் என பரவும் காணொளி உண்மையா?

Fact Check By: Suji Shabeedharan

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *