பொலிஸ் சேவையில் இணைய நேர்முக பரீட்சைக்குச் சென்ற 36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர் என பரவும் தகவல் உண்மையா ? 

False இலங்கை | Sri Lanka
Subscribe to our WhatsApp Channel


INTRO :

பொலிஸ் சேவையில் இணைய நேர்முக பரீட்சைக்குச் சென்ற 36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “ பொலீஸ் சேவையில்

இணைந்து கொள்ள

நேர்முக பரீட்சைக்குச்சென்ற36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர்

என பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!  ” என இம் மாதம் 29 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (29.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

சமூகவலைத்தளத்தில் பரவுகின்ற குறித்த தகவல் தொடர்பாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளனவா என நாம் முதலில் ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான எவ்விதமான செய்தியும் வெளியாகியிருக்கவில்லை 

எனவே இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இவ்வாறானதொரு செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினை நாம் ஆய்வு செய்தபோது அவ்வாறான எவ்விதமான செய்தியும் வெளியாகி இருக்கவில்லை.

இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு

இதன் உண்மை தன்மையினை கண்டறிய நாம் பொலிஸ் ஊடக பிரிவிற்கு தொடர்புக்கொண்டு வினவியபோது,நேர்முக பரீட்சைக்கு முகம் கொடுக்கும் நபரின் தனிப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் ஒரு நாளும் வெளியிடப்படாது என தெரிவித்தனர்.

மேலும் இது போலியான தகவல் எனவும் தெரிவித்தனர்.

இலங்கை பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவு

நாம் மேலும் குறித்த தகவலினை உறுதி செய்ய இலங்கை பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவிற்கு தொடர்புகொண்டு வினவியபோது, அவர்களும் குறித்த தகவல் போலியானது என தெரிவித்தனர்.

மேலும் நேர்முக பரீட்சைக்கு முகம் கொடுக்கும் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியிடமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பொலிஸ் சேவையில் இணைய நேர்முக பரீட்சைக்குச் சென்ற 36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர் என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: பொலிஸ் சேவையில் இணைய நேர்முக பரீட்சைக்குச் சென்ற 36 முஸ்லீம் இளைஞர்கள் போதைப்பாவனையாளர் என பரவும் தகவல் உண்மையா ?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *