
INTRO :
குவைத்து குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும் நிலையத்தின் மீது தாக்குதல் என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ குட்டையை குழம்பிய குவைத், பொலந்து எடுத்த ஈரான்.. #குவைத்து குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும் பிரதான #மின் நிலையம் மற்றும் #கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது #ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது
.
ஈரான் மீதான மிகப்பெரிய அமெரிக்க தாக்குதல்களின் #பிரதான செயற்பாட்டுத்தளமாக மத்தியகிழக்கில் கட்டாரை விடவும் குவைட் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது. ” என இம் மாதம் 19 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (19.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஈரானின் தாக்குதலால் குவைத்தின் அல்-சுபியா மின்சார மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகக் குவைத் மின்சாரம் மற்றும் நீர் வள அமைச்சகம் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. Link
Reverse Image Search
வைரலான காணொளியில் சில காட்சிகளை (Keyframes) Reverse Image Search இனை பயன்படுத்தி ஆய்வினை செய்து பார்த்தபோது, ஜோர்டானிய செய்தி நிறுவனமான ‘அம்மான் நெட்’ (Amman Net) கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அன்று வெளியிட்ட அதே காணொளி என கண்டறியப்பட்டது.
குறித்த பதிவில் ஜோர்டானின் அல்-சுபைஹி பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சிகள் என அரபு மொழியில் தலைப்பிடப்பட்டு குறித்த பதிவு பதிவேற்றப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
ஜோர்டான் விபத்து குறித்த செய்தி அறிக்கை:
ஜோர்டானிய செய்தி நிறுவனமான ‘பெட்ரா’ (Petra) தகவலின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜோர்டானின் வடமேற்குப் பகுதியில் உள்ள அல்-பல்கா பிராந்தியத்தில் அமைந்த அல்-சுபைஹி மின்மாற்றி நிலையத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
ஏனைய செய்தி நிறுவனங்கள் இது குறித்து வெளியிட்டிருந்த செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றன. Link | Link 2
தீயணைப்புப் படையினர் தீயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாகவும், இதில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை. மேலும், விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த மின் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததாக செய்தி வெளியாகியுள்ளமை காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், குவைத்து குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும் நிலையத்தின் மீது தாக்குதல் என பரவும் காணொளி கடந்த வருடம் ஜோர்டானின் அல்-சுபைஹி பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

