
காத்தான்குடியில் கடற்கரை வீதியில் புதியதோர் உதயம் என ஒரு ஹோட்டல் வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
ஜீ சிங்கப்பூர் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #கிழக்கில்_புதியதோர்_உதயம்
#காத்தான்குடியில் கடற்கரை வீதியில் புதியதோர் உதயம் #fish_cool_restaurant
உங்கள் குடும்பத்துடன் வந்து புது வித அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ……..” என்று இம் மாதம் 12 ஆம் திகதி (12.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த வீடியோவில் கடைசி முடிவில் 1 நிமிடம் 25 ஆம் செக்கனில் king koi coffee என்ற ஓர் பெயர் பலகையினை காணக்கிடைத்தது. நாம் அந்த பெயரினை Google-ல் தேடியபோது, இது வியட்நாமில் அமைந்துள்ள ஓர் ஹோட்டல் என்பதை கண்டுபிடித்தோம்.

மேலும், நாம் மேற்கொண்ட தேடலின் போது, அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் பேஸ்புக்கில் கிழக்கில் புதியதோர் உதயம் என வெளியாகியுள்ள வீடியோவுடன் ஒத்து போகின்றமை காணக்கிடைத்தது.


fish cool restaurant kattankudy என்று கூகுள் வரைப்படத்தில் தேடியபோது அவ்விதமான பெயரில் எமக்கு எந்த ஹோட்டலும் கிடைக்கப்பெறவில்லை.
Google Map
இதன்மூலமாக, வியட்நாமில் உள்ள ஹோட்டல் வீடியோவை காத்தான்குடியில் புதியதாக திறக்கப்பட்ட ஹோட்டல் என பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.