யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்; உண்மை என்ன?

False இலங்கை | Sri Lanka

INTRO :
இலங்கையினை சேர்ந்த ஆணொருவர் பெண்ணாக மாறியதாக ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

 வவுனியா நெற் என்ற பேஸ்புக் கணக்கில் ”யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்”  என இம் மாதம் 10 ஆம் திகதி  (10.02.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த புகைப்படம் பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில், நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, 

பாலியல் மாற்றத்திற்கு உள்ளான இந்திய கடற்படையில் பணிப்புரிந்த அதிகாரியான கிரி என்ற நபர் 2010 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைந்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு பாலியல் மாற்றத்திற்கான சிகிச்சையினை மேற்கொண்டு பெண்ணாக மாறியுள்ளார்.

wionews.com | Archived link

indiatimes.com | Archived link

எமது தேடலுக்கு அமைய, இந்திய கடற்படையில் பணிபுரிந்து பெண்ணாக மாறியவரின் புகைப்படத்தினை மட்டக்களப்பு பகுதியினை சேர்ந்த திருநங்கை என்று கூறி பகிர்ந்து வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்; உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *