பேபி கொலோன் பற்றி வெளியான செய்தியின் உண்மைத் தன்மை தெரியுமா?

இலங்கை | Sri Lanka

INTRO :

இலங்கையில் குழுந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் சவர்காரம் என்று குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக பேபி ஷெரமி நிறுவனம் அமைந்துள்ளது.

இதில் வெளிவருகின்ற பேபி கொலோன் தயாரிப்பு பற்றிய தகவல் கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காண்கிடைத்தது. 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் அதன் உண்மை தன்மையினை கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Azhan Haneefa என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மக்களே அவதானம்!

#பேபி_குளோன் என்று நம்பி வாங்கி நாம்  குழந்தைகளுக்கு அள்ளிப் பூசும் Baby Cheramy அவர்கள் மேல் பூசுவதற்கானதல்ல என்பதை அந்நிறுவனமே தெளிவாக கூறியுள்ளது. மாறாக இது குழந்தைகளது ஆடைகளுக்கு மாத்திரம் உபயோகப்படுத்த தகுமான ஒன்றாகும்.

நானும் FB வழியாக வறும் இச்செய்தியின் உண்மை நிலவரத்தை அறிவதற்கு பெட்டிகளை எடுத்து அவதானித்த வேளையில் இச்செய்தி உண்மை என்பதை அறிந்துகொண்டேன்.

இது ஒரு வகை, மற்றொரு வகை தான் Odiclone க்கானது, அதில் Refershing fragrance என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக இரண்டும் வெவ்வேறானவை 

1. உடைகளுக்கானது (இதை உடலுக்கு பயன்படுத்த முடியாது)

2. உடலுக்கானது (இதுவே odiclone)

கொள்வனவு செய்யும் போது தெளிவாக வாசித்து வாங்குவதே நுகர்வோராகிய எமது கடமை என்பதை உணர்ந்து செயற்படுவோம்.

 இதனை வாசிப்பவர்கள் தெரியாதவர்களுக்கு இதனை விழிப்பூட்டும் முகமாக தெரியப்படுத்தி ஆபத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்போம்.”  என இம் மாதம் 20 ஆம் திகதி  (20.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இதைபோன்று இது குறித்து மக்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிட்ட வண்ணமே இருந்தனர்.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற தகவலினை ஆராய்வதற்கு நாமும் குறித்த பொருட்களை கொள்வனவு செய்து ஆய்வினை மேற்கொண்டோம்.

அதில் பேஸ்புக்கில் குறிப்பிட்டவாறு குறித்த இரு வகையென தெரிவிக்கு பேபி கொலோன் பின்பக்கத்தில் புதிதாக சந்தைக்கு வந்துள்ள பேபி கொலோன் பிள்ளைகளின் ஆடைகளுக்கு மட்டுமே பயன்படுத்தவும். அது பச்சிளம் குழந்தைகளுக்காக பரிந்துரைக்கப்படவில்லை. என்ற வசனம் அச்சிடப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

மேலும் இது குறித்து வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் வினவியபோது, பழைய பேபி கொலோன் தற்போது சந்தைக்கு வருவதில்லை அதனை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக நாம் குறித்த பொருட்களை உற்பத்தி செய்து சந்தை படுத்தும் Hemas நிறுவனத்தினையே நாம் தொடர்புக்கொண்டு இது குறித்து வினவினோம். பேபி கொலோன் பச்சிளம் குழந்தைகளுக்கு பூசும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். விசேடமாக அவற்றை பச்சிளம் குழந்தைகளின் மென்மையான இடங்களுக்கு பூசுவதை தவிர்க்க வேண்டும். இதனையே வைத்தியர்கள் மற்றும் சுகாதார பிரிவினரும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக தெரிவித்தார்.

இதன் காரணமாகவே குறித்த விடயம் அதாவது பச்சிளம் குழுந்தைகளுக்கு உபயோகிக்கும் போது கவனமாக இருக்கவேண்டும் என்பதை தெரிவிக்கும் வகையில் தான் புதிதாக வடிவமைக்கப்பட்ட பைக்கற்றுக்களில் ”பிள்ளைகளின் ஆடைகளுக்கு மட்டுமே பயன்படுத்தவும், இது பச்சிளம் குழுந்தைகளுக்காக பரிந்துரைக்கப்படவில்லை.” என்ற வாக்கியம் அச்சிடப்பட்டுள்ளதாக, அந் நிறுவனத்தின் நிறைவேற்று பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

அதனுள் உள்ள பேபி கொலோன் எவ்விதமான மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை என்றும் அதனை பொதிசெய்யும் பைக்கற்றுக்கள் மட்டுமே மாற்றம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த குழப்ப நிலையினை கருத்தில் கொண்டு உடனடியாக மக்கள் பாவணைக்கு வரும் பேபி கொலோன் பொதி செய்யும் பைக்கற்றுக்கள் அனைத்திலும் தெளிவான விளக்கத்துடன் மக்களுக்கு புரியும் வண்ணம் அச்சிடப்பட்டு சந்தைக்கு வரும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு தெளிவூட்டலும் வழங்கியுள்ளனர்.

Facebook Link | Archived Link

baby cheramy cologne classic என்று நாம் கூகுளில் தேடிய போது அது பொதிசெய்யப்படும் பைக்கற்றுகளில் வடிவமைப்புக்கள் மாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளமை காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைவாக பேபி கொலோன் உற்பத்தியில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அதை பொதிசெய்யும் பைக்கற்று மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்காக, புதிதாக வாசகம் ஒன்றை அச்சிட்டுள்ளனர்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பேபி கொலோன் பற்றி வெளியான செய்தியின் உண்மைத் தன்மை தெரியுமா?

Fact Check By: Nelson Mani 

Result: Explainer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *