
INTRO :
அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் இன்னா-லில்லாஹி வ இன்னா-லில்லாஹி ராஜிஊன்.
அல்லாஹ் அவர்களுக்கு சுவர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்குவானாக, ஆமீன்
#makkah #muslim #TamilNews #hajj” என கடந்த மாதம் 27 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (27.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு இருப்பின் அது தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கும் நாம் இது குறித்து ஆய்வினை மேற்கொண்டபோது அவ்வாறான செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை.
இணையத்தில் பரவி வருகின்ற குறித்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழவே நாம் குறித்த புகைப்படத்தினை செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இதனை உறுதி செய்ய synthID பயன்படுத்தி ஆய்வு செய்த போதும் இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்தது

மேலும் இது தொடர்பாக சர்வதேச உண்மை கண்டறியும் நிறுவனங்களும் ஆய்வறிக்கையினை மேற்கொண்டிருந்தமையும் காணக்கிடைத்தது.
அராஃபா சமவெளி
சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு தென்கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரையின் மிக முக்கியமான இடமாகும்.
ஹஜ்ஜின் போது இஸ்லாமியர்கள் துல்ஹிஜ்ஜா மாதத்தின் 9 ஆம் நாளன்று (அராஃபா நாள்) இந்த இடத்தில் ஒன்றுகூடி, இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்கள். அராஃபத் சமவெளியின் மையத்தில் அமைந்துள்ள ஜபல் அர்-ரஹ்மா (கருணையின் மலை) என்ற சிறிய குன்றின் மீதுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. Link
மக்காவில் துயர சம்பவம்
சவுதி அரேபியாவின் மக்கவில், கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. Link
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் என பரவும் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டமை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

