
INTRO :
சீனாவில் 700 ஆண்டுகள் பழமையான மசூதி என்று ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

W O R L D என்ற பேஸ்புக் கணக்கில் ” சீனாவில் 700 ஆண்டுகள்
பழமையான மசூதி..
மாஷா அல்லாஹ்” என இம் மாதம் 18 ஆம் திகதி (18.03.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பதியப்பட்டிருந்த குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு அழகிய மசூதி என கண்டறியப்பட்டது.
Masjid Tiban என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் குறித்த மசூதியானது இந்தோனேசியாவில் அமைந்துள்ளது என எமது ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டது.
International Quran News Agency என்ற இணையத்தில் இது 1968 ஆம் ஆண்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1978 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய நாம் கவனித்தால் இது நிர்மாணிக்கப்பட்டு 43 வருடங்களே ஆகின்றது.

எமது தேடலுக்கு அமைய, – சீனாவில் 700 ஆண்டுகள் பழமையான மசூதி என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:URL Slug: Fact Check –700-year-old mosque in China சீனாவில் 700 ஆண்டுகள் பழமையான மசூதியா?
Fact Check By: Nelson ManiResult: False