சவுதி அரேபியாவில் ஆதம் என்ற 6 வயது சிறுவன் விமானம் ஓட்டி சாதனையா?

Misleading சர்வதேசம்

INTRO :
சவுதி அரேபியாவில் ஆதம் என்ற 6 வயது சிறுவன் விமானம் ஓட்டி சாதனை என்று ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Pathmanathan Nathan என்ற பேஸ்புக் கணக்கில் ” சவுதி அரேபியாவில் ஆதம் என்ற 6 வயது  சிறுவன் விமானம் ஓட்டி சாதனை….

A 6-Year-Old Genius Kid, Adam becomes

Etihad Airways Pilot for a day in Saudi Arabia..”  என இம் மாதம் 07 ஆம் திகதி  (07.03.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இணையத்தில் பதியப்பட்டிருந்த குறித்த வீடியோவில் இருந்து நாம் screenshot எடுத்து புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, Etihad Airways நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு வீடியோ காணக்கிடைத்தது.

குறித்த வீடியோவிற்கு கீழ் பதிவிட்டிருந்த பதிவினை நாம் வாசித்தபோது,

விமான பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் கருவியினை பயன்படுத்தி குறித்த சிறுவனின் ஆசையினை நிறைவேற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளமை காணக்கிடைத்தது.

அதற்கமைய குறித்த சிறுவன் விமானத்தினை ஒத்த ஒரு பயிற்சி கருவியில் தான் விமானத்தை செலுத்தியுள்ளார்.

இது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது விமானத்தினை செலுத்துவது போன்ற அனுபவத்தினை வழங்குமே தவிற இது உண்மையில் வானத்தில் பறக்கும் விமானம் அல்ல.

எமது தேடலுக்கு அமைய, பேஸ்புக்கில் சவுதி அரேபியாவில் ஆதம் என்ற 6 வயது சிறுவன் விமானம் ஓட்டி சாதனை என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சவுதி அரேபியாவில் ஆதம் என்ற 6 வயது சிறுவன் விமானம் ஓட்டி சாதனையா?

Fact Check By: Nelson Mani 

Result: Misleeading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *