AMAZON WEB VIP அமேசான் நிறுவனத்தினால் இயக்கப்படும் இணையமா?

False இலங்கை

INTRO :
AMAZON WEB VIP என இணையத்தளத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் முறை என தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” https://www.amazonweb.vip/login?inviteCode=26585202

*Amazon Earning Platform*  

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

AMAZON WEB VIP

பகுதி நேர வருவாயை வீட்டில் இருந்து கொண்டே  உழைக்கும்

இலகு வழி …..⤵️

📌ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்📱

📌மாதாந்தம் 9000 ரூபா தொடக்கம் 15000 ரூபாவிற்கும் அதிகமாக உழைக்க முடியும்.💰

📌தினமும் 5 நிமிட வேலை

என்னை போலவே நீங்களும் இலகுவாக பணம் சம்பாதிக்க முடியும்!

⭐ *அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது

https://www.amazonweb.vip/login?inviteCode=26585202

மேலே உள்ள இணையவழியின் ஊடாக*

*உங்களை பதிவு (Register) செய்து  &  Login செய்து Amazon  அங்கத்தவராக இணைந்து சந்தைப்படுத்தல் துறையில் நுழைந்திடுங்கள்.*

இதில் இணைந்து சம்பாதிக்க Amazon Company இற்கு நீங்கள் ஒரே ஒரு தடவை மாத்திரம் தான் 5000/= பணம் செலுத்த வேண்டும்👍

https://www.amazonweb.vip/login?inviteCode=26585202

 *Only one time payment😍life time income💸*

 இணைந்து சம்பாதிக்க உள்ள அனைவரும் register https://www.amazonweb.vip/login?inviteCode=26585202

முதலில் இந்த link இணை click செய்து உங்கள்.mobile number மற்றும் ஏதேனும் 

Password கொடுங்கள்

2ஐயும் கட்டாயமாக note panni வையுங்கள்

தொலைபேசி இலக்கம் கொடுக்கும் போது 0 அடிக்காமல் கொடுக்கவும்👇

Ex:-771234567 or 94771234567

Link👇https://www.amazonweb.vip/login?inviteCode=26585202

More details inbox me ✉️

#EarnFromHome #money #workfromhome #giveaway #Amazon #earnmoneyonline #earnmoney #earnonline #srilanka

[05/06, 19:53] My Airtel: Amazon Web 2இல் சிங்களம் பேசும் மக்கள் 95% இணைந்து சம்பாதிக்கின்றனர்

தமிழ் பேசும் மக்களுக்கு தற்போது நாம் அறிமுகம் செய்து உள்ளோம்🤩

தினமும் சம்பாதிக்க விரும்பினால் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்✅

இதில் இணைந்து சம்பாதிக்க Amazon Company இற்கு நீங்கள் ஒரே ஒரு தடவை மாத்திரம் தான் 5000/= பணம் செலுத்த வேண்டும்👍

 *Only one time payment😍life time income💸*

 இணைந்து சம்பாதிக்க உள்ள அனைவரும் register செய்யவும்👇

https://www.amazonweb.vip/login?inviteCode=26585202

முதலில் இந்த link இணை click செய்து உங்கள்.mobile number மற்றும் ஏதேனும் 

Password கொடுங்கள்

2ஐயும் கட்டாயமாக note panni வையுங்கள்

தொலைபேசி இலக்கம் கொடுக்கும் போது 0 அடிக்காமல் கொடுக்கவும்👇

Ex:-94771234234

Link👇🏼https://www.amazonweb.vip/login?inviteCode=26585202

*Whatsapp மூலம் Register செய்து விட்டு எம்மை தொடர்பு கொள்ளவும்*

*Contact link*

https://wa.me/message/NLXQIVPCJBDAF1

அதிகமான members தினமும் இணைவதால் எல்லோருக்கும் உடனடியாக reply செய்ய முடியாது உள்ளது

எனவே, இணைய விரும்பினால் register செய்துவிட்டு 

hai, registered✅ i like to join amazon 

Contact my whatsapp👇🏼https://wa.me/message/NLXQIVPCJBDAF1

என message செய்யுங்கள்

மேலதிக விபரம் சொல்லி தருகிறோம் “ என கடந்த மாதம் 27 ஆம் திகதி (27.07.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் இன்னும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

இலங்கையில் தற்போது நிலவி வருகின்ற பொருளாதார 

நெருக்கடியினை உபயோகித்து பலரும் பல்வேறு விதமாக மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் ஆசையினை காட்டி அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.

Amazon FBA என்றால் என்ன?

இது Fulfillment by Amazon (FBA) என்றழைக்கப்படும். குறித்த சேவை

அமேசான் நிறுவனத்திற்கு விற்பனையாளர்களே தமது பொருட்களை விற்பனை செய்ய அமேசான் நிறுவனம் உதவும் முறையாகும்.

இந்த முறையில் அமேசான் நிறுவனம் குறித்த பொருட்களை எடுத்து அவர்களே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் முறையாகும். விற்பனையாளர்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்து அமேசான் நிறுவனத்திற்கு வழங்கல் மட்டுமே இங்கு இடம்பெறும் நடவடிக்கையாகும். மற்றைய அனைத்து விதமான கொடுக்கல் வாங்கல் போன்ற விற்பனை விடயங்கள் எல்லாம் அமேசான் நிறுவனம் வழங்கும்.

அதற்கான உத்தியோகப்பூர்வ இணைய முகவரி Amazon FBA

amazonweb.vip எவ்வளவு பழமையான இணைய முகவரி என்று நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, இது இவ்வருடம் மே மாதம் 30 ஆம் திகதி அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது.

whois.com

நாம் குறித்த இணைய முகவரியை scamadviser இணையத்தின் உபயோகத்துடன் இது குறித்து தேடுதல் மேற்கொண்ட போது, இதன் நம்பகத்தன்மையானது 1 விதமாகவே காணப்பட்டது.

scamadviser.com

Amazon இலச்சினையுடன் web.vip என்ற வாசகம் சாதாரணமாக சேர்க்கப்பட்டு அதன் இலச்சினை உருவாக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. ஆகவே நாம் இது குறித்து அமேசான் இந்திய நிறுவனத்தினை நாடினோம்.

அவர்கள் இது தொடர்பாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பிறகு எமக்கு இது முற்றிலும் ஏமாற்றும் விதமாக யாரோ நபரினால் இயக்கப்படும் இணையதளம் என எமக்கு உறுதி செய்தனர். 

இதில் அவர்கள் இலங்கையில் அமேசான் மூலம் பணம் சம்பாதிக்கும் எந்தவொரு இணையத்தினையும் இயக்கவில்லை எனவும், அதுபோன்ற நடவடிக்கைகளை விளம்பரப்படுத்தவில்லை என உறுதி செய்தனர்.

இது போன்ற விடயங்களில் தமக்கு அறிய தர அவர்களின் இணையத்தள முகவரிகளை எமக்கு வழங்கியிருந்தனர். 

The help page: https://us.amazon.com/gp/help/customer/display.html?nodeId=G4YFYCCNUSENA23B

Webpage to report scams: https://www.amazon.com/gp/help/customer/display.html/?nodeId=201909130

அமேசான் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தத்துடன் வேறு எவ்விதமான சொல் சேர்த்து இணையத்தினை அவர்கள் இயக்கமாட்டார்கள். அவர்களின் இணையத்தளங்கள் எல்லாம் sub domain மூலமே இயக்கப்படும். (உதாரணமாக – sell, affiliate, developer

மேலும், தற்போது AMAZON WEB VIP என்ற குறித்த இணையதளம் முற்றாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

AMAZON WEB VIP இது உண்மையில் அமேசான் நிறுவனத்தினால் இயக்கப்படும் இணையம் என பகிரப்படும் தகவல் போலியானது. மேலும் இதுபோன்ற சேவையினை அவர்கள் இலங்கையில் முன்னெடுக்கவில்லை எனவும் உறுதி செய்தனர்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:AMAZON WEB VIP அமேசான் நிறுவனத்தினால் இயக்கப்படும் இணையமா?

Fact Check By: S G Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *