இவ்வளவு தான் உலக வாழ்க்கை என பரவும் வீடியோ உண்மையில் நடந்ததா?

Misleading சமூக ஊடகம்

INTRO :
இவ்வளவு தான் உலக வாழ்க்கை என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” இவ்வளவுதான் உலக வாழ்க்கை “ என 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17 ஆம் திகதி (28.07.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் இன்னும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

சிறுநீர் கழிக்கும் ஒரு நபர் அவர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த நபரின் காரின் மீது லொறியில் கொண்டு செல்லப்பட்ட கல்லொன்று விழுந்து கார் நன்றாக சேதமடைவது போல் குறித்த வீடியோ அமைந்துள்ளமை காணக்கிடைத்தது.

நாம் முதலில் குறித்த வீடியோவில் ஒரு பகுதியை ஸ்கிரின் ஷாட் எடுத்து கூகுள் தளத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வினை மேற்கொண்டோம். 

இந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான Arun Bothra அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் 2020 குறித்த வீடியோவை பதிவேற்றம் செய்து அதிஷ்டமா அல்லது துர்அதிஷ்டமா என்ற கேள்வியினை பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Twitter Link

நாம் இது தொடர்பாக மேலும் நடத்திய ஆய்வின் போது, Syndicate production நிறுவனத்தினால் RYDS campaign என்ற விடயத்திற்காக உருவாக்கப்பட்ட சிஜிஐ செய்யப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது.

syndicate.se | Archived link

இவ்வளவு தான் உலக வாழ்க்கை என பரவும் வீடியோ சிஜிஐ செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்ட வீடியோ என எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இவ்வளவு தான் உலக வாழ்க்கை என பரவும் வீடியோ உண்மையில் நடந்ததா?

Fact Check By: S G Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *