
INTRO :
கிறிஸ்டியானோ ரொனால்டோ குர்ஆன் ஓதுவதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Shifry Omerdeen என்ற பேஸ்புக் கணக்கில் “ கிரிஸ்டியானோ ரொனால்டோ ்்் உடலில் பச்சை குத்தவில்லை காது குத்தி வளையல் போடவில்லை மதுபான விளம்பரத்தில் நடிக்கவில்லை Fast food உணவுகளுக்கு விளம்பரம் இல்லை alcohol பானங்கள் உனவுகளுக்கு விளம்பரம் இல்லை தனது வருமானத்தை சேமித்து வைக்கவில்லை clubகளில் ஆடி பாடி மகிழவில்லை பென்களுடன் கும்மாளம் இல்லை சூது மாது களியாட்டம் இல்லை ஏன் என்று கேட்ட போது அவர் சொன்ன ஒரே ஒரு வசனம் அது #ஹராம் தனக்கு கிடைக்கும் நேரங்களில் #குர்ஆன் ஓதுவதாக அவர் பலஸ்தீனத்தில் வைத்து பேட்டி கொடுத்தார்” என இம் மாதம் 17 ஆம் திகதி (17.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, இது கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒத்த இன்னொரு நபர் என எமக்கு அறியக்கிடைத்தது.
Biwar Abdullah என்ற ஈராக் நாட்டினை சேர்ந்த இந்த நபர். கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒத்த தோற்றத்தினை கொண்டிருப்பதினால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

கட்டுமான தொழிலாளியான இவர் டிக்டொக் கணக்கில் பதிவிட்டிருந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரின் ஷாட்டை உண்மையான கிறிஸ்டியானோ ரொனால்டோ குர்ஆன் ஓதுவதாக பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
@bewarabdullah Hello 🤲
♬ Al Kafirun – Ahmed Al Ajamy
இது குறித்து பிற உண்மை கண்டறியும் நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையும் எமக்கு கிடைக்கப்பெற்றன. வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய கிறிஸ்டியானோ ரொனால்டோ குர்ஆன் வாசிப்பார் என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.