
INTRO :
முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவிற்கு தற்போதைய அரசில் அமைச்சு பதவி கிடைக்கவுள்ளதாக சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

TamilWireless.com என்ற பேஸ்புக் கணக்கில் “ மீண்டும் பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! பசிலுடன் சேர்ந்து அமைச்சராகும் மைத்திரி
பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவி பிரமாணம் செய்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகிய இருவரும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#basil #maithri #s_p_dissnayake #minister_post
Read more…https://tamilwireless.com/…/miindum-paraparappaakum… “ என நேற்று (28.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இது குறித்து நாம் தேடிய போது முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.
அதில் குறித்த செய்தியில் எவ்விதமான உண்மை தன்மையும் இல்லை என்றும், தற்போதைய அரசாங்கத்திடம் தான் எந்த அமைச்சு பதவியையும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வாறான எந்த அமைச்சு பொறுப்பினையும் பெற்றுக்கொள்ள அவர் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சு பதவி என வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சு பதவியா?
Fact Check By: Nelson ManiResult: Missing Context