
INTRO :
மன்னார் பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த இடப்பெயர் பலகையில் அமெரிக்காவிற்கான தூரம் குறிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Kala Kubesh என்ற பேஸ்புக் கணக்கில் “ வாங்களன் சும்மா அமெரிக்காக்கு போய் வருவம்….. “ என இம் மாதம் 04 ஆம் திகதி (04.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பகிரப்படுகின்ற படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, எமக்கு அது மன்னாரில் அமைந்துள்ள பொது வைத்தியசாலைக்கு செல்லும் தூரத்தினை குறிக்கும் பெயர் பலகையென கண்டறிய முடிந்தது.

எமக்கு கிடைக்கப்பெற்ற புகைப்படத்தில் காணப்படும் CLC Finace பெயர்ப்பலகையினை பயன்படுத்தி மன்னார் மாவட்டத்தில் குறித்த இடத்தினை கூகுள் மேப்பில் தேடியபோது, குறித்த பெயர் பலகையானது மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் St. Mary’s ஆலயத்திற்கு அருகாமையில் குறித்த பெயர் பலகையினை காணக்கிடைத்தது.

குறித்த பெயர் பலகையினை சுற்றியுள்ள பகுதியினை நாம் ஆய்வு செய்த போது, தற்போது இணையத்தில் அமெரிக்காவிற்று 0.7 கிலோமீற்றர் என பதியப்பட்டு பகிரப்படும் புகைப்படத்திற்கு ஒத்துள்ளமை எமக்கு காணக்கிடைத்து.
அதில் நிறுத்தப்பட்டுள்ள லொறி, குறித்த பெயர் பலகையிற்கு அருகில் இருக்கும் சுவரின் நிறம் மற்றும் பின்புறத்தில் இருக்கும் இரண்டு மாடி வீடு போன்ற அனைத்தும் குறித்த புகைப்படத்துடன் ஒத்து போகின்றமை எம்மால் உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு செல்ல இருந்த தூரத்தினை சில விசமிகள் அமெரிக்கா என எடிட் செய்து பரப்பியுள்ளமை உறுதியானது.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், இணையத்தில் அமெரிக்காவிற்கான தூரம் என எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெயர் பலகையில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதா?
யாழில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் பெயர் பலகையில் சிங்கள மொழி நீக்கமா?
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:மன்னாரில் இடப்பெயர் பலகை ஒன்றில் அமெரிக்காவிற்கான தூரம் குறிக்கப்பட்டதா ?
Fact Check By: Nelson ManiResult: Altered