நடிகர் நாசர் மரணம் என பரவிய செய்தி உண்மையா ?
INTRO :
தென்னிந்திய நடிகர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி நடிகர் நாசர் மரணம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
Trendy TikTok என்ற பேஸ்புக் கணக்கில் “ சற்றுமுன் பிரபல நடிகர் நாசருக்கு ஏற்பட்ட சோகம்.. அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்..!! “ என இம் மாதம் 02 ஆம் திகதி (02.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
உண்மையிலேயே நடிகர் நாசர் இருந்து விட்டாரா,? என்று குறித்த செய்தி இணைப்பினை நாம் பார்வையிட்டபோது, அவர்கள் இணையத்திற்கு வந்தமைக்கு நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தனர்.
news39media.com | Archived link
மேலும் அதன் கீழ் ஒரு யூடியுப் வீடியோ இணைக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதனை நாம் பார்வையிட்ட போது, அதில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகரான Nazar Mohammad மரணத்தினை பற்றியே குறிப்பிட்டுள்ளனர்.
நாம் கூகுளில் நடிகர் நாசர்( Nazar) என தேடுதல் செய்த போது, தென்னிந்திய நடிகரான நாசரே எமக்கு கிடைக்கப்பெற்றது.
ஆப்கானிஸ்தான் நகைச்சுவை நடிகரான நாசரின் மரணத்தினை தென்னிந்திய நடிகர்களின் புகைப்படத்தினை பயன்படுத்தி மற்றும் நடிகர் நாசர் என்று தலைப்பிட்டும் தவறான கருத்தில் செய்தியினை வெளியிட்டுள்ளமை எமக்கு உறுதியானது.
நாம் ஆப்கானிஸ்தான் நகைச்சுவை நடிகரான நாசரின் மரணம் குறித்து ஆய்வினை செய்த போது, அவரின் மரணம் தொடர்பாக வெளியான செய்திகள் எமக்கு கிடைத்தது.
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஆப்னானிஸ்தான் நாட்டில் மரணித்த நகைச்சுவை நடிகர் நாசரின் மரணத்தினை தென்னிந்திய நடிகர்களின் புகைப்படத்தினை பயன்படுத்தி தவறான கருத்தினை பதிவிட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:நடிகர் நாசர் மரணம் என பரவிய செய்தி உண்மையா ?
Fact Check By: Nelson ManiResult: Missing Context