
INTRO :
இலங்கையில் மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா பரவலை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அது பற்றிய பல்வேறு பதிவுகள் காணக்கிடைக்கின்றது. அதற்கமைய கொரோனாவினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்த ஓட்டமாவடி நிலப்பரப்பு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Faisar Rosy என்ற பேஸ்புக் கணக்கில் “ இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் 😔😔
நம்மை நாம் பாதுகாப்போம்.
பிறரையும் நாம் பாதுகாப்போம்.
STAY HOME MY FRIENDS “ என இம் மாதம் 12 ஆம் திகதி (12.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இதன்போது, Google Image Search இனை பாவித்து குறித்த புகைப்படத்தினை ஆய்வு செய்த போது, JawaPos.com என்ற இணையத்தில் குறித்த புகைப்படம் எமக்கு கிடைக்கப்பெற்றது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு பகுதியில் குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டமை இதன் போது கண்டறியப்பட்டது. குறித்த இணைய பதிவில், இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் உள்ள Rorotan TPU இல், சரியான நடைமுறைகளின்படி கொரோனா நோயாளிகளின் சடலங்கள் புதைக்கப்படுகின்றன என பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இந்தோனேசிய வலைத்தளமான beritajakarta விலும் வடக்கு ஜகார்த்தாவில் கொரோனா அடக்கம் செய்ய ஒரு தனி பகுதி ஒதுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருந்த செய்தியும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
மேலும் இந்த இடம் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இறந்தவர்களின் உடல்களை புதைக்க ஒரு சிறப்பு பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
KOMPASTV என்ற யூடியுப் சேனலில், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இந்த சம்பவம் நடந்ததாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளது. இந்த இடத்தைப் பற்றிய பிபிசி செய்தி வீடியோ அறிக்கையும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
குறித்த வீடியோ இதற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வேறு நாடுகள் உடன் தொடர்பு படுத்தி பகிரப்பட்ட நிலையில் இதனை ஆய்வு செய்த Factcrescendo Cambodia குழுவின் ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இது தொடர்பாக நாம் மேலதிக தகவல்கள் பெறுவதற்காக சமீபத்தில் குறித்த இடத்தினை நேரில் சென்று ஆய்வு செய்த நீதி அமைச்சர் அலி சப்ரின் ஊடாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகத்தின் (ONUR) இயக்குநர்கள் குழுவின் உறுப்பினரிடம் வினவிய போது, ஓட்டமாவடி புதைகுழியில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அதே இடத்தில் கூடுதல் இடத்தை பிரதேச செயலகம் மூலம் பெற அனுமதி கோரப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் இன்னும் சில பிரதேசங்களில் இதற்காக அனுமதி பெறும் வேலைத்திட்டம் நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார்.
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், கொரோனாவினால் மரணித்தவர்கள் அடக்கம் செய்யும் ஓட்டமாவடி இடம் என இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு கொரோனா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எமது சிங்களப்பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி இடமா இது?
Fact Check By: Nelson ManiResult: False