இளநீர், உப்பு,தேன் மற்றும் எலுமிச்சை கலவை கொரோனா மருந்தா?

Misleading இலங்கை

INTRO :
கொரோனாவை 2 மணித்தியாலத்தில் குணப்படுத்தி விடலாம் என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம் என்ற பேஸ்புக் கணக்கில் “ Yesterday received a call from a friend in Jarkarta, please listen properly, it’s a true and  very popular now in Indonesia.Will cure Covid in 2 hours. Take  a young coconut water add a tea spoon of salt plus a lime fruit then drink it. Within 2 hours you will see the result and is cured. The friend took only once and was okay and after 3 days went for test and the results shows negative. All can try once or twice a week. Now very popular in Indonesia and has spread over to Malaysia. Please share so as to help others and safe lives.

ஜர்கார்த்தாவில் உள்ள ஒரு நண்பரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, தயவுசெய்து சரியாகக் கேளுங்கள், இது இந்தோனேசியாவில் இப்போது ஒரு உண்மையான மற்றும் மிகவும் பிரபலமானது. கோவிட்டை 2 மணி நேரத்தில் குணப்படுத்தும். ஒரு இளம் தேங்காய் தண்ணீரை எடுத்து ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் மற்றும்  பாதி எழும்பிச்சம் பழத்தை சேர்த்து குடிக்கவும். 2 மணி நேரத்திற்குள் நீங்கள் முடிவைக் காண்பீர்கள் மற்றும் குணமடைவீர்கள். நண்பர் ஒரு முறை மட்டுமே எடுத்துக் கொண்டார், சரி, 3 நாட்களுக்குப் பிறகு சோதனைக்குச் சென்றார், முடிவுகள் எதிர்மறையாகக் காட்டப்படுகின்றன. அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முயற்சி செய்யலாம். இப்போது இந்தோனேசியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் மலேசியா வரை பரவியுள்ளது. மற்றவர்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கைக்கும் உதவ தயவுசெய்து பகிரவும். “ என இம் மாதம் 01 ஆம் திகதி (01.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இதன்போது, இந்தோனேசியாவில் உள்ள உள்ளக மருத்துவப் பேராசிரியரும், இந்தோனேசியா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியின் பிரதானியான ஆரி ஃபஹ்ரியல் சியாம் (Ari Fahrial Syam), இந்த பானமானது கொரோனா தொற்றுக்கான மருந்து என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தோனேசியாவில் உள்ள மருந்தியல் பேராசிரியர் ஒருவரும் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட அறிக்கை ஆதாரமற்ற அறிக்கை என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக இந்தோனேசியாவில் உள்ள AFP உண்மை கண்டறியும் நிறுவன மேற்கொண்ட ஆய்வறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாம் மேலதிக தகவல்கள் பெறுவதற்காக உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்தை தொடர்பு கொண்ட இது தொடர்பாக வினவிய போது, ​கொரோனா சிகிச்சையாக தேங்காய் நீர், உப்பு,தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலவையை உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகரிக்கவில்லை என வைத்தியர் நளிகா குணவர்தன  எமக்கு தெரிவித்தார்.  அத்துடன் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியைத் தவிர வேறு எந்த மருந்தையும் உலக சுகாதார நிறுவனம் (WHO) இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று அவர் எமக்கு சுட்டிக்காட்டினார்.

கொரோன தொடர்பாக பரவுகின்ற கட்டுக்கதைகளைப் பற்றி மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஒரு குறிப்பை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இது குறித்து நாம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவ கல்விக்கான பேராசிரியர் எல்.பி.ஏ. திரு. கருணாதிலக்கவிடம் வினவியபோது, இது கொரோனாவிற்கான சரியான சிகிச்சை முறையல்ல எனவும், இருப்பினும் தேங்காய் நீரை குடிப்பது சோர்வடைந்துள்ள உடலுக்கு சிறிய ஆற்றலை அளிக்க வல்லது என்றும் இது சேலைன் ஏற்றலுக்கு ஒத்த நடவடிக்கை எனவும் தெரிவித்தார். மேலும் உடலுக்கு தேவையான உப்புகளை உப்பு அளிப்பதோடு உடலை நீரிழப்பிலிருந்து பாதுகாக்கிறது என்றும் அவர் கூறினார்.

தேங்காய் நீர் உடலுக்கு ஓரளவு நிவாரணம் அளித்தாலும், வைரஸ் நோய்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அவசியமான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் அது அவ்வளவு முக்கிய பங்கு வகிக்காது என்று மேலும் எமக்கு அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு ஆயுர்வேத மருத்துவ விரிவுரையாளர் லக்ஷிகா சந்திரசிறியை நாங்கள் தொடர்பு கொண்டபோது, ​​தேங்காய் நீரை குடிப்பது உடலுக்கு நல்லது, ஆனால் அதை கொரோனா தடுப்பு மருந்தாக, பரிந்துரைக்க முடியாது என்று கூறினார்.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், இளநீர், உப்பு, தேன் மற்றும் எலுமிச்சை கலவை கொரோனா மருந்தாக பயன்படுத்த முடியாது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எமது சிங்களப்பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இளநீர், உப்பு,தேன் மற்றும் எலுமிச்சை கலவை கொரோனா மருந்தா?

Fact Check By: Nelson Mani 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published.