
INTRO :
100 வருடங்களுக்கு முந்தைய கலெண்டரும் ஆகஸ்ட் மாத கலெண்டரும் ஒன்றாக இருப்பதாகவும் இது 100 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் சம்பவம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

உங்கள் நண்பன் தமீம் என்ற பேஸ்புக் கணக்கில் ” 1920 ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாத காலண்டரும்
2021 ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாத காலண்டரும்
100 ஆண்டுக்கு பிறகு ஒரே தேதி ஒரே கிழமை “ என இம் மாதம் 20 ஆம் திகதி (20.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் குறித்த இரு வருடங்களுக்கான கலெண்டர்களை ஆய்வு செய்த போது அவைகள் ஒத்து போனது உண்மை என தெரியவந்தது. மேலும் இது 100 வருடங்களுக்கு ஒரு முறை தான் நடக்கும் நிகழ்வு என்பதில் எமக்கு சந்தேகம் எழவே நாம் 1920 ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டாக ஆய்வினை மேற்கொண்டு வந்தபோது, 1926,1937,1943,1948 மற்றும் 1954 ஆகிய வருடங்களில் இது போன்றே கலெண்டரில் கிழமையும் திகதியும் ஒன்றாக உள்ளமை கண்டறியப்பட்டது.

குறித்த தேடலின் போது குறைந்தபட்சம் 6 வருட இடைவெளியில் இவ்வாறு ஒத்த கிழமையும் திகதியும் அமைந்தவாறு கலெண்டர்கள் உள்ளமை தேடலின் போது தெரியவந்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வுக்கு அமைய 100 வருடத்திற்கு, ஒரே திகதி ஒரே கிழமையில் உள்ள ஆகஸ்ட் மாதம் என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.