
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் – ரோஹித்த மற்றும் டட்யானா தம்பதியினருக்கு கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) காலை ஆண் குழந்தை பிறந்தது.
இதன்போது, டட்யானா கையில் குழந்தையினை ஏந்தியவாறு ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Sivarajah Ramasamy என்ற பேஸ்புக் கணக்கில் “எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் – ரோஹித்த – டட்யானா தம்பதியினருக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது…
தாத்தாவானார் மஹிந்த… “ என்று கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அதில் மஹிந்த ராஜபக்ச குழந்தையினை பார்வையிடும் ஒரு புகைப்படமும் மற்றும் டட்யானா கரங்களில் ஒரு குழந்தையினை ஏந்தியவாறு ஒரு புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடுதலினை மேற்கொண்டோம்.

குறித்த தேடலின் போது இந்த புகைப்படமானது இவ்வருடம் மார்ச் மாதம் 29 ஆம் (29.03.2019) இணையத்தில் முதல் முதலாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இதில் ரோஹித்த ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த புகைப்படத்தினை பதிவேற்றம் செய்துள்ளதோடு, அதில் தனது நண்பரான ரஜித்த ஜயவர்த்தனவிற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

குறித்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டெகிராம் பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

Instagram Link | Archived Link
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் டட்யானா கையில் ஏந்தியுள்ள குழந்தை ரோஹித்த ராஜபக்சவின் நண்பனான ரஜித்த ஜயவர்த்தனவினுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.