ஹப்புத்தளை விபத்துக்குள்ளான விமானம் இதுவா?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
முதல்வன் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலகுரக விமானம் வீழ்ந்து நால்வர் சாவு – ஹப்புத்தளையில் சம்பவம்” என்று நேற்று (03.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவோடு முதல்வன் செய்தி லிக்கினையும் இணைத்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்ட முதலில் நாம் குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.
குறித்த தேடலின் போது aniwa.lk என்ற இணையத்தளத்தில் இலங்கையில் இடம்பெற்ற விமான விபத்துக்கள் என்ற தலைப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் மூலம் இப்புகைப்படமானது 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இரத்மலான விமான நிலையத்தில் தர இறங்கிய இருந்தநிலையில் ஹோகன்தர என்ற இடத்தில் விமானம் விபத்திக்குள்ளானது.மேலும் கூகுள் புகைப்படங்களில் Hokandara Air Crash என்ற தேடிய போது, குறித்த புகைப்படங்கள் காணக்கிடைத்தன.
மேலும் ஹோகன்தர விமான விபத்து தொடர்பாக 2014 ஆம் ஆண்டு வெளியான செய்திகள்.
Daily News | News link | Archived Link |
aviation-safety.net | News link | Archived Link |
Adaderana.lk | News link | Archived Link |
மேலும் நேற்று (03.01.2020) ஹபுத்தளையில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் வெளியான செய்தி.
Defence ministry | Archived Link
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஹப்புத்தளை விபத்துக்குள்ளான விமானம் என்று வெளியான புகைப்படம் 2014 ஆம் ஆண்டு ஹோகன்தர என்ற இடத்தில் இடம்பெற்ற விமான விபத்து புகைப்படம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.