
தினமும்உண்மையான தகவலை தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணைந்திடுங்கள்
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” தனுஷ்க குணதிலக்கவை சிறையில் சந்தித்த Glenn Maxwell | மன்னிப்பு கேட்ட #DanushkaGunathilaka !
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள தனுஷ்க குணதிலக்கவிடம் நலம் விசாரிப்பதற்காக ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரரான Glenn Maxwell காவல் நிலையம் சென்றுள்ளார்.
எமது நாட்டில் வந்து உமக்கு நேர்ந்த இந்த துரதிஷ்ட நிகழ்விற்கு தனுஷ்காவிடம் மன்னிப்பு கேட்டு சம்பவத்தை சமரசம் செய்ய முயற்சிப்பதாக #மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
Glenn Maxwell (Fans Club) கூறியதாவது : “நான் தனுஷ்க குணதிலக்கவிற்காக நிற்கிறேன். இலங்கை அணியின் மிக வலிமை மிக்க (Strong Player) வீரர் இவராவார். எனது நாட்டிற்கு வந்து இப்படி பிரச்சினையை எதிர்கொண்டமைக்கு நான் மன்னிப்பை கேட்கிறேன். அத்துடன் உனது விடுதலைக்காக குறித்த பெண்ணிடம் சமரசமாக பேசி பிரச்சினை தீர்க்க முயற்சிக்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு Glenn Maxwell தனுஷ்கவிடன் கூறியதாகவும், பின்னர் தனுஷ்க Maxwell யிடம் தானும் இவ்வாறு நடந்தமைக்கு மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
👉👉👉👉 உங்களில் யாரேனும் டி20 உலக கிண்ண ஜேர்சியை (T20 World Cup Jersey) வீட்டிலிருந்து நம்பகமான முகவர் ஊடாக பெற்றுக் கொள்ள WhatsApp ஊடாக தொடர்பு கொள்ளவும். 👈👈👈👈 “ என இம் மாதம் 08 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு (08.11.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
2022 ஆம் ஆண்டு இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவப்படுத்திய தனுஷ்க குணதிலக்க, சிட்னிக்கு கிழக்கே உள்ள ரோஸ் பே பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் கடந்த 5 ஆம் திகதி அவுஸ்ரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அவுஸ்திரேலிய சகலத்துறை ஆட்டக்காரரான கிளென் மெக்ஸ்வெல் தனுஷ்க குணதிலக்கவின் நலம் குறித்து விசாரிக்க சிட்னி நகர பொலிஸ் நிலையத்திற்கு சென்றதாக எந்த சர்வதேச செய்தியும் கிடைக்கவில்லை, மேலும் இது குறித்து அவுஸ்ரேலியாவின் முக்கிய ஊடகங்கள் கூட செய்தி வெளியிடவில்லை என்பது எமது ஆய்வின் மூலம் தெரியவந்தது.
மேலும், மெஸ்வெல் தனது சமூகவலைத்தளத்தின் ஊடாக இவ்வாறான செய்தி எதும் வெளியிட்டாரா என அவரின் சமூகவலைத்தளங்களை ஆய்வு செய்த போது, அவ்வாறான எவ்விதமான செய்தியும் அவரினால் வெளியிடப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.
இலங்கையில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ணப் போட்டி தொடர்பாக பயணம் செய்த ஊடகவியலாளரான அஷாம் அமீனிடம் இது தொடர்பாக வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் என எமக்கு உறுதி செய்தார்.
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதில் இருந்து இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய தனுஷ்க குணதிலக்கவிற்கு மெக்ஸ்வெல் உதவுவதாக வெளியான செய்தி தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தனுஷ்க குணதிலக்கவிற்கு மெக்ஸ்வெல் உதவுவதாக தெரிவித்தாரா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team