
‘’ கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு வெளியிட்ட சிவன் பார்வதி நாணயம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’500 வருடம் பழமையான இங்கிலாந்து நாணயத்தில் சிவன் – பார்வதி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது… இஸ்ட் இந்தியா கம்பெனியால் 1616ம் ஆண்டு வெளியானது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் தகவல் தேடியபோது, 1616ம் ஆண்டு இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சி உச்சக்கட்டத்தில் இருந்ததாக, தெரியவந்தது. ஆம், 1707ம் ஆண்டு ஔரங்கசீப் மறைவுக்குப் பிறகுதான், இந்தியாவில் ஆங்காங்கே சிறு சிறு பகுதிகளை ஆங்கிலேயர்கள் பிடித்து, தமது ஆட்சியின் கீழ் கொண்டு வர தொடங்கினர்.
எனவே, 1616ம் ஆண்டு தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு நாடு பற்றி இவ்வாறு நாணயம் அச்சடிக்க ஆங்கிலேயர்களுக்கு தேவையே ஏற்பட்டிருக்கவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
கூடுதல் ஆதாரத்திற்காக நாம் ரிசர்வ் வங்கியின் சென்னை பிராந்திய அலுவலகத்தில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
ஏற்கனவே இதுபோன்று ஐயப்பன், ராமர் உருவம் பொறித்த நாணயங்களை கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்டதாக வதந்திகள் பரவின. அவை பற்றி நாமும் ஆய்வு செய்து, போலியான செய்தி என்பதை நிரூபித்துள்ளோம்.
Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2
எனவே, எந்த ஆதாரமும் இன்றி இவ்வாறு சிலர் வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு வெளியிட்ட சிவன் நாணயம் என்று பரவும் வதந்தி!
Written By: S G PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team