‘ஹமாஸ் அமைப்பினர் என் மகனைக் கொன்று எனக்குப் பரிமாறினர்’ என்று இஸ்ரேலிய பெண் குற்றஞ்சாட்டினாரா?

சமூக ஊடகம்

‘’ ‘ஹமாஸ் அமைப்பினர் என் மகனைக் கொன்று எனக்குப் பரிமாறினர்’’ என்று ’ என்று இஸ்ரேலிய பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ ஹமாஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய இந்த இஸ்ரேலிய பெண் கூறுவது: 

மூன்று நாட்கள் அவர்கள் கஸ்டடியில் இருந்தேன் உணவு உட்பட எதுவுமே கொடுக்க மாட்டார்கள்.பிறகு கொஞ்சம் உணவும் சமைத்த மாமிசமும் கொண்டு வைத்தார்கள். பசிமிகுதியால் நான் அதை தின்று விட்டேன் .அதன் பிறகு தான் சொன்னார்கள் உன் தட்டில் இருந்த மாமிசம் உன் ஒரு வயது ஆண் குழந்தயின் மாமிசம் என்று சொன்னார்கள். பத்து வயது பெண் குழந்தையை கற்பழித்து பெற்றோர் முன் வைத்து கொன்று விட்டார்கள். இவர்களைத்தான் நல்லவர்கள் என்று I.N.D.I.கூட்டணி ஆதரிக்கிறது இவர்களுக்கு வாக்களித்தால் நாளை நமது பாரத மக்களுக்கும் இதே கொடூரமான நிகழ்வு தான் நடக்கும்..,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  

Facebook Claim Link l Archived Link 

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் தகவல் தேடியபோது, இதுதொடர்பாக, Daily Mail ஊடகம், அதன் யூ டியுப் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்றைக் கண்டோம். 

இந்த பதிவில், ‘’ யாசிதி இனத்தைச் சேர்ந்த ஈராக் பெண் எம்பி Vian Dakhil ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட தனது இனப் பெண்கள் (மக்கள்) சந்தித்த சித்ரவதைகள் பற்றி பேசுகிறார்,’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

இதில், Daily Mail ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றின் லிங்க் இணைத்துள்ளனர். 

dailymail.co.uk link 

மேற்கண்ட செய்தியில்,’’ ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட யாசிதி அடிமைப் பெண் ஒருவர் மூன்று நாட்கள் உணவின்றி வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரது சொந்த ஆண் குழந்தையையே கொன்று, சமைத்து அதனை அவருக்கே உணவாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் கொடுத்துள்ளனர். இதுபோன்று யாசிதி இனப் பெண்கள், சிறுமிகள் பல கொடுமைகளை அனுபவித்துள்ளனர் என்று ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தால் கடத்தப்படும் யாசிதி பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் ஈராக் பெண் எம்பி வியான் தாக்கில் எகிப்திய டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்,’’ என்று கூறப்பட்டுள்ளது.  

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

NY Daily News Link l punchng link 

இதன்படி, ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தால் கடத்தப்படும் யாசிதி பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் ஈராக் பெண் எம்பி 2017ம் ஆண்டு அளித்த பேட்டியை எடுத்து, ‘ஹமாஸ் அமைப்பினர் செய்த கொடூரம்,’ என்று குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘ஹமாஸ் அமைப்பினர் என் மகனைக் கொன்று எனக்குப் பரிமாறினர்’ என்று இஸ்ரேலிய பெண் குற்றஞ்சாட்டினாரா?

Written By: S G Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *