அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம்

‘’ அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ 7 lakh Christians in America left Christianity and joined Hinduism and created a world record !!! Let truth and orthodoxy prevail.

அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர் !!! உண்மையும், வாய்மையும் வெல்லட்டும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  

Facebook Claim Link l Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோ உண்மையா என்று நாம் தகவல் தேடியபோது, இது இங்கிலாந்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. முழு வீடியோ இதோ…

கடந்த 2023 ஜூன் மாதம் லண்டனில் நடைபெற்ற ரத யாத்திரையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது பகிர்ந்து, அமெரிக்காவுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ இணையதள முகவரி இதோ… 

rathayatra.co.uk official site  

மேலும், இந்த ரத யாத்திரை ஏற்பாட்டாளர் ISKCON தரப்பிலும் இதுபற்றி செய்தி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

ISKCON News Link    

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: S G Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *