பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தனது சொந்த மக்களால் டக்ளஸ் தேவானந்தா தாக்கப்பட்டாரா?

அரசியல்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது தவறானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

நேற்று (14) நடைப்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மக்களால் தாக்கப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

Facebook Link  | Archived Link

குறித்த வீடியோவின் தலைப்பில்  டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் வைத்து தமது சொந்த மக்களால் தாக்கப்பட்டாரா ??? என தெரிவித்து இன்றைய தினம் (2024.11.15) பகிரப்பட்டுள்ளதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

இது உண்மையென எண்ணி பலரும் சமூகஊடகங்களில் பகிர்ந்துள்ளதனை எம்மான காண முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது குறித்த உண்மையை கண்டறிவதற்காக நாம் தேடுதலில் ஈடுபட்டபோது, முதலில் இது தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம்.

இதன் போது குறித்த சம்பவமானது கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி (2024.04.05) கிளிநொச்சி  பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்ட சம்பவம் என்பதனை நாம் உறுதிப்படுத்தினோம்.

குறித்த சம்பவத்தின் பின்னணி

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது.

ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் திரும்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து தமிழன் பத்திரிகையின் இணைய பக்கத்தில் வெளியான செய்தியை பார்வையிடவும்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்தில் வெளியான காணொளி

இது தொடர்பில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி வெளியான செய்திகள் Link / Link

மேலும் இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளும் நோக்குடன் இந்த காணொளியை பார்வையிடும் போது ஒரே சம்பவத்தின் காணொளி இருவேறு திசைகளில் இருந்து பதிவுசெய்யப்பட்டுள்ளதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

ஆகவே இந்த காணொளிகள் வெவ்வேறு நாட்களில் இடம்பெற்ற சம்பவம் என எண்ணி உண்மைத் தன்யை அறியாமல் பகிரப்பட்டுள்ளதனையும் எம்மால் கவனிக்க முடிந்தது.

அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் நாம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, இது இன்றைய தினம் (2024.11.15) இடம்பெற்ற சம்பவம் அல்ல எனவும், இந்த சம்பவமானது கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி (2024.04.05) இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி என்பதனையும் அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு கேட்டபோது இன்றைய தினம் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதனை உறுதி செய்தனர்.

எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களை ஆராய்ந்து பார்க்கும் போது குறித்த தாக்குதல் முயற்சியானது நேற்று (15.11.2024) இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னரான சம்பவம் அல்ல என உறுதிப்படுத்தப்படுவதுடன்.கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் காணொளி தவறான தலைப்பிடப்பட்டு பதவிவேற்றம் செய்யப்பட்டுள்ளதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *