கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்தியதால் உயரிழந்த நபர்! உண்மை என்ன?

சமூகம் | Society


INTRO: 
உறங்கும் போது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்திய நபர் ஒருவர் உடம்பில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தமை தொடர்பிலான புகைப்படத்துடன் கூடிய காணொளி ஒன்று சமூகஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

றித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

<iframe frameBorder=’0′ width=’640′ height=’360′ webkitallowfullscreen mozallowfullscreen allowfullscreen src=”https://www.awesomescreenshot.com/embed?id=33892427&shareKey=36096df894460737c33943c998b36469“></iframe>

Archived Link

குறித்த பதிவில் அபுதாபியில் உள்ள நபரொருவர் இரவு தனது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்துகொண்டு ஹெட்போனில் பாடல் கேட்டுக்கொண்டு உறங்கியுள்ளார் இதன்போது அவரது உடம்பு முழுவதும் மின்சாரம் பாய்ந்து, அவரின் உடம்பில் துளைகள் உருவாகி நரம்புகள் வெடித்து இறந்துள்ளதாகவும், இதனால் கையடக்கத்தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு பயன்படுத்த வேண்டாம் எனவும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு அதிகளவில் பகிருமாறும் குறித்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Fact Check (உண்மை அறிவோம்)


இந்த காணொளி தொடர்பான உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் குறித்த காணொளியில் இருந்த புகைப்படத்தினை ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வின்போது குறித்த புகைப்படத்தினை ஒத்த பல்வேறு புகைப்படங்களுடனான செய்திகளை எம்மால் அவதானிக்க முடிந்தது.

மேலும் இது தொடர்பில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நாம் தேடுதல்களை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் பேஸ்புக்கின் ஒழுக்க விதிமுறைகளுக்கு அமைய குறித்த புகைப்படம் நீக்கப்பட்டிருந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

A screenshot of a computer

Description automatically generated

இது தொடர்பில் தொடர்ந்து மேற்கொண்ட  தேடுதலில் இந்தோனேசிய ஊடகம் ஒன்று 2017 ஆம் ஆண்டு இந்த படம் குறித்த ஆய்வை மேற்கொண்டு இந்த புகைப்படமானது இந்தியாவில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையது என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த செய்தியை பார்வையிட 

அந்த வகையில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய போராட்டக்காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் இடையிலான மோதல்களின் போது  இந்திய ஊடகங்களில் இந்த படம் வெளியாகியிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

A person lying on a bed with blood on his back

Description automatically generated

மேலும் இதன் உண்மைத் தன்மையினை அறியும் நோக்கில் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள் குறித்து இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமையை எம்மால் அவாதானிக்க முடிந்தது.

இது தொடர்பில் இந்திய ஊடகளில் வெளியான செய்திகள் Link / Link 

 2015.10.14 ஆம் திகதி சீக்கிய செய்திகளை வெளியிடும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான Sikh Press Association தமது X தளத்தில் குறித்த படத்தை வெளியிட்டிருந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

குறித்த X தள பதிவை பார்வையிட 

இந்தியாவில் 2%  சீக்கியர்களே வசிக்கின்றனர். மற்றொரு சிறுபான்மையினர் காவல்துறையின் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என குறித்த  X தள பதிவில் தலைப்பிடப்பட்டிருந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது. 

மேலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டதனை போன்று கையடக்கத்தொலைபேசியை சார்ஜ் செய்துக்கொண்டு காதில் ஹெட்போன் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துக்கள் எவ்வாறானது என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்தோம். 

இதன்போது இந்தேனேசிய பல்கலைக்கழகமான UM Surabaya பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் விரிவுரையாளரான லுக்மான் ஹக்கீம் இது தொடர்பில் தெரிவித்துள்ள கட்டுரையில், உறக்கத்தின் போது தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்துவதனால் உயர் மின அழுத்தம் மற்றும் அதிகரித்த சத்தம் இவற்றினால் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு, காது தனது செயற்பாட்டை இலக்கும் சந்தர்ப்பம் பெருமளவில் ஏற்படும் என அவர் விளக்கியுள்ளார்.

மேலும் சில சமயங்களில் உடற்பாகங்கள் செயலிழக்கும் நிலை ஏற்படுவதுடன் உயிர் ஆபத்துக்களும் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையை பார்வையிட

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion:முடிவு

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில்  சமூகஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் உள்ள புகைப்படமானது, கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்தியதால் நரம்புகள் வெடித்து உடல் துளையிடப்பட்டு அதனால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் புகைப்படம் அல்ல எனவும், 2015 ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தடியடி மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த நபரின் புகைப்படம் என்பதுவும் தெளிவாகின்றது.  


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்தியதால் உயரிழந்த நபர்! உண்மை என்ன?

Written By: Fact Crescendo Team  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *