
INTRO
கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருவதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
இதனடிப்படையில் இலங்கையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு என குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்களில் பதவிவொன்று பகிரப்பட்டு வருவதனையும் நாம் அவதானித்தோம்.
எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விபரம் (what is the claim)
குறித்த பதிவு “15 வருடங்களின் பின்னர் இந்த அநியாயக்காரனின் படத்தை இந்த மண்ணில் பிரசித்தமாக காட்சிப்படுத்துவதற்கு வாய்ப்பளித்த 69 இலட்சத்தில் ஒருவனாக திகழாமையை எண்ணி பெருமை கொள்கிறேன்“ என தலைப்பிடப்பட்டு கடந்த 2024.11.30 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் உண்மைத்தன்மை அறியாது பலரும் இதனை சமூகஊடகங்கள் ஊடாக பகிர்ந்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட பதிவில் உள்ள புகைப்படம் இலங்கையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கும் பட்சத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் தலைவரின் படத்தை இவ்வாறு பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட்டமை சட்டத்திற்கு எதிரான செயல் எனவே அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கும்.
எனவே பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவித செய்திகளும் வெளியாகவில்லை என்பதனை உறுதிப்படுத்தினோம்.
அதனைத் தொடர்ந்து குறித்த படத்தினை ரிவர்ஸ் இமேஜில் உட்படுத்தி தேடுதலில் ஈடுபட்ட போது குறித்த நிகழ்வு பிரித்தானியாவின் டார்ட் போர்ட் என்ற இடத்திலுள்ள தமிழ் அறிவியற் கழகத்தில் (Dartford Tamil Knowledge Centre) இடம்பெற்ற நிகழ்வு என்பதனை நாம் அறிந்துகொண்டோம்.
மேலும் குறித்த தமிழ் அறிவியற் கழகம் பிரித்தானியாவில் உள்ள இடம் என்பதை உறுதிசெய்வதற்காக நாம் குறித்த இடம் தொடர்பில் கூகுளில் ஆராய்ந்தே போது Dartford Tamil Knowledge Centre பிரித்தனியாவில் அமைந்துள்ள ஓர் கழகம் என்பதனை உறுதிசெய்தோம்.
மேலும் மாவீரர் தின நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை குறித்த கழகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறித்த பதிவை பார்வையிட
இதேவேளை இது தொடர்பான செய்தியை பிரித்தானியாவை தளமாகக் கொண்டTamil guardian இணையத்தளம் வெளியிட்டிருந்தது.
குறித்த செய்தியை பார்வையிட
அத்துடன் பிரித்தனியாவில் தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்ளில் பகிரப்பட்ட புகைப்படம் இருப்பதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. Link
எவ்வாறாயினும் குறித்த பதிவு தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இது போன்ற மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றனவா என நாம் பிராந்திய ஊடகவியலாளர்களிடம் வினவினோம்.
எனினும் இது போன்ற அமைப்பை கொண்ட மண்டபங்கள் வடக்கு கிழக்கை உள்ளடக்கிய மாவட்டங்களில் இல்லை எனவும் இவ்வாறு பிரபாகரனின் புகைப்படம் திரையில் காட்சிப்படுத்தப்பட்டு நிகழ்வுகள் இடம்பெறில்லை என்பதைனையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
எனவே மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த X தள பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று இலங்கையில் அவ்வாறான மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறவில்லை எனவும், குறித்த புகைப்படத்தில் உள்ள நிகழ்வு கடந்த 2024.11.24 ஆம் திகதி பிரித்தானியாவின் டார்ட் போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் (Dartford Tamil Knowledge Centre) இடம்பெற்ற நிகழ்வு என்பதுவும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கையில் பிரபாகரனின் புகைப்படத்தை திரையில் காட்சிப்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதா?
Written By: S G PrabuResult: False
