தாதியர்களின் கடமை தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா கூறியது உண்மையா?

Missing Context இலங்கை | Sri Lanka

INTRO

கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா வைத்தியசாலைகளில் தாதியர்களின் கடமைகள் தொடர்பில் கூறிய கருத்திற்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

எனவே இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விபரம் (what is the claim)

Youtube Link  | Archived Link

குறித்த காணொளியானது மூதூர் வைத்தியசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்த கருத்தில் வைத்தியசாலையில் தாதியர்களுக்கு கட்டில் விரிப்பு, நோயாளிகளை பராமரிப்பது உள்ளிட்ட சில கடமைகளே தனக்கு தெரிந்தளவில் பரிதுரைக்கப்பட்டுள்ளதாகவும் கெனியுலா செலுத்துவது உள்ளிட்டவை வைத்தியர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமை என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.01.02) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த காணொளியில் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தாதியர்களின் கடமை தொடர்பில் தெரிவித்த விடயங்கள் தவறு என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook | Archived Link

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த கணொளியில் வைத்தியர் இாமநாதன் அர்ச்சுனா தெரிவித்த விடயம் குறித்து உண்மை அறியும் நோக்கில் தாதியர்களின் கடமைகள் என்னவென்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.

தாதியர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் என்ன? 

ஒரு நோயாளரின் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் வைத்தியர்களே மிகப்பெரிய பங்கை வகிக்கின்றனர், அதேபோன்று தாதிய உத்தியோகஸ்தர்களுக்கும் சில கடமைகள் இருக்கின்றன.

மருத்துவர்களின் கடமை நோயாளர்களின் நோய் நிலமையை ஆராய்ந்து அவர்களுக்கான சிகிச்சை முறையை பரிந்துரைப்பதாகும்.

இவ்வாறு முடிவு செய்த மருத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் தாதிய உத்தியோகத்தர்களின்  கடமை முக்கியமானது.

உதாரணத்திற்கு, வைத்தியர் மருந்துகளை பரிந்துரைத்தபின், அந்த மருந்துகளை பரிந்துரைத்தபடி கொடுப்பது தாதிய உத்தியோகத்தர்களின் கடமையாகும்.

அதுபோல் வைத்தியர்கள், என்ன மாதிரியான பரிசோதனைகள் என்று முடிவெடுத்தபின் , அவற்றைச் செயற்படுத்துவதில் தாதியரின் கடமை முக்கியமானது.

அதுதவிர ஒரு வைத்தியசாலை விடுதியின் முகாமைத்துவத்திலும் தாதிய உத்தியோகத்தர்களின்  பொறுப்பு முக்கியமானது.

விடுதியில் இருக்கும் மருத்துவ உபகரணங்களை சரியாக பேணுதல், மருத்துகளை சரியாக பேணுதல் என்பவையும் இவர்களின் கடமையாக கூறப்படுகின்றது.

அதைவிட முக்கியமான இன்னொரு கடமை, நோயாளியின் நோய் நிலமையை கண்கானித்து வத்தியருக்கு அறிவிப்பது இவர்களின் முக்கிய பொறுப்பு.

இதுதவிர நோயாளியின் சுத்தம் பேணுதல், வைத்தியசாலை விடுதியின் சுத்தம் பேணுவதும் இவர்களின் முக்கிய பொறுப்பாகும்.

சத்திரசிகிச்சை நேரத்திலும் இவர்களின் கடமை மிக முக்கியமானது. ஒரு சத்திரசிகிச்சை செய்யும்போது, அதற்குத்தேவையான உபகரணங்களைக் கொடுத்து சத்திர சிகிச்சை செய்ய உதவுவதும் தாதிய உத்தியோகத்தர்களின் கடமையாகும்.

srilankaeducation.info வில் தாதிய உத்தியோகத்தர்களின் கடமைதொடர்பில் இவ்வாறு அறிக்கையிடப்பட்டிருந்தமை எம்மால் அவதானிக்க முடிந்தது. Link

மேலும் நாம் இது தொடர்பில் களுபோவில போதனா வைத்தியசாலையின் வைத்தியர் செனித லியனகேவிடம் வினவினோம்.

இதன்போது வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய தாதிய உத்தியோகஸ்தர்கள் நோயாளர்களுக்கு (cannula) கெனியுலா செலுத்துவது உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் வைத்தியசாலை வளாகத்திற்குள் செய்வதற்கான அனுமதி உள்ளதாகவும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.

மேலும் வைத்தியசாலைகளுக்கு வெளியில் தாதிய உத்தியோகத்தர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்த தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் விசேட தாதிய உத்தியோகஸ்தர் புஷ்பா ரம்யானி செய்ஸா அவர்களிடம் வினவினோம்

இதன்போது தாதிய உத்தியோகஸ்தர்களுக்கு நோயாளிகளின் ஆரோக்கியத்தில் முழு பொறுப்பு உள்ளதாகவும் வைத்தியர்களின் அறிவுறுத்தல்களின் பேரில் அவர்களுக்கான மருத்துவ செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சின் சிரேஷ்ட தாதிய அதிகாரி

இது குறித்து நாம் சுகதார அமைச்சின் சிரேஷ்ட தாதிய அதிகாரி ஒருவரிடம் வினவிய போது, இலங்கையில் தாதிய உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர்கள் முழுமையாக குணமடைந்து செல்லும் வரையிலும் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வு தொடர்பில் முக்கிய பொறுப்பு உள்ளதாகவும் அவர் குறிபபிட்டார்.

மேலும் ஒரு நோயாளி எதாவது சந்தர்ப்பத்தில் இறக்கும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அதன்போது இடம்பெறும் அனைத்து செயற்பாடுகளும் தாதிய உத்தியோகஸ்தரினாலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போது இலங்கையில் தாதிய பயிற்களின் போது கெனியுலா (cannula) செலுத்துவது எவ்வாறு என்பது தொடர்பிலும் கற்றுக்கொடுக்கப்படுவதாகவும், வைத்தியர்களின் பரிந்துரையில் படி நோயாளர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் மயக்க மருந்து நிபுணர்களாக தாதிய உத்தியோகஸ்தர்கள் பணியாற்றுவதாகவும் இலங்கையில் இதுவரை அவ்வாறான பயிற்சிகள் தாதியர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் தாதிய சேவையில் தன்னிச்சையாக செயற்படுதல் மற்றும் வழிகாட்டுதலின் பேரில் செயற்படுதல் என இரண்டு பிரிவுகள் உள்ளதாகவும் அதில் இரத்த அழுத்த பரிசோதனை, உடல் வெப்பநிலை தொடர்பான பரிசோதனை என்பன தன்னிச்சையான செயற்பாடுகளில் அடங்குவதாகவும், இரத்த பரிசோதனை கெனியுலா செலுத்துதல் உள்ளிட்ட சில செயற்பாடுகள் மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் இடம்பெறுபவை  எனவும் அவர் தெரிவித்தார்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தாதியர்களின் கடமைகள் என குறிப்பிட்டவை மாத்திரம் அவர்களின் கடமைகள் அல்ல எனவும் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் உடல்நல ஆரோக்கியத்தில் தாதியர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது எனவும் தெளிவாகின்றது.

மேலும் வைத்தியர்களின் பரிதுரைகளின் கீழ் தாதியர்கள் நோயாளிகளுக்கு  கெனியுலா (cannula) செலுத்துதல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்பது சுகாதார அமைச்சின் சிரேஷ்ட தாதிய அதிகாரியின் கூற்றின் படி  புலனாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title: தாதியர்களின் கடமை தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா கூறியது உண்மையா?

Fact Check By: Suji Shabeedharan 

Result: Missing context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *