ஷின்மோடேக் எரிமலை வெடிப்பின் புகைப்படங்களா இவை?

Misleading சர்வதேசம் | International

ஜப்பான் நாட்டில் ஷின்மோடேக்  எரிமலை வெடித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள என தெரிவிக்கப்பட்டு சில் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே அவற்றின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம்

தகவலின் விவரம் (What is the claim)

Facebook| Archived Link

குறித்த பதிவில் ஜப்பான் நாட்டில் ஷின்மோடேக் எனும் எரிமலை வெடித்திருக்கிறது. எரிமலை வெடித்ததில் 3000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. வரும் போட்டோக்கள், வீடியோக்கள் பார்க்கவே பயமாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு இந்த புகைப்படங்கள் கடந்த 2025.07.07 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் ஜப்பானில் உள்ள ஷின்மோடேக்  எரிமலை மீண்டும் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்தோம். 

இதன்போது ஜூலை 2 ஆம் திகதி, ஜப்பானின் கிரிஷிமா மலையில் உள்ள ஷின்மோடேக் எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் என்பன ஜப்பானியர்களின்  X தளங்களில் பகிரப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

மேலும் ஜூலை 2 ஆம் திகதி ஜப்பான் நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் ஷின்மோடெக் எரிமலை வெடித்து சிதறியதாகவும், இதனால் வானத்தை எட்டும் அளவுக்கு புகைமேகம் எழுந்ததாகவும். மியாசாகி மற்றும் காகோஷிமா பகுதிகள் புழுதியால் மூடப்பட்டன என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) அறிவித்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.Link | Link 

எனினும் ஜப்பானிய ஊடகங்களில் இந்த எரிமலை வெடிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளி என்பன சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களுடன் ஒத்துப்போகவில்லலை.

குறித்த சமூக ஊடகப்பதிவில் மூன்று புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன எனவே அவை செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையா என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக குறித்த புகைப்படங்களை  AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, அவற்றில் இரண்டு புகைப்படங்கள் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை  என்பது உறுதியானது.

எனவே மற்றை புகைப்படத்தினை நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தபோது,  இதே ஷின்மோடெக் எரிமலையானது 2018 ஆம் வெடித்து சிதறிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது கண்டறியப்பட்டது.Link | Link

மேலும் ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, தற்போதைய ஷின்மோடெக் எரிமலை வெடிப்பு 3வது மட்டத்தில் உள்ளதாகவும், அதன் காரணமாக எரிமலையில் அடிவாரத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஜுன் மாதம் 23 ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Link

ஜப்பானின் ஷின்மோடெக் எரிமலை

கடந்த ஜூலை 2 ஆம் திகதி ஜப்பானிய அரசாங்கத்தின் எரிமலை ஆராய்ச்சிக் குழுவின் கூட்டத்தில், ஷின்மோடெக் எரிமலை அதிக அளவில் வாயுவை வெளியேற்றுவதாகவும், நிலத்தின் கனவளவு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர், ஆனால் புதிய மக்மா வெடிப்புக்கான எந்த அறிகுறிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினர். தற்போதைய செயல்பாடு மக்மா வெடிப்பு அல்ல என்றாலும், இந்த சூழ்நிலையை நிராகரிக்க முடியாது என்றும், மேலும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கு கண்காணிப்பு அவசியம் என்றும் எரிமலை ஆராய்ச்சிக்  குழுவின் தலைவரான ஷிமிசு ஹிரோஷி குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 22 அன்று, ஜப்பானின் கிரிஷிமா மலையில் உள்ள ஷின்மோடெக் வெடித்தது. சுமார் 500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை மூட்டங்கள் உயர்ந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இருப்பினும், இது ஒரு பெரிய வெடிப்பு அல்ல. அதன்படி, எரிமலையைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் பகுதிக்கு 2ஆம் கட்ட எச்சரிக்கையை வெளியிட நாட்டின் வானிலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர், மேலும் 23 ஆம் திகதிக்குள், அது 3 ஆம் கட்ட எச்சரிக்கையாக மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த வெடிப்பு சாதாரண வாழ்க்கையையோ அல்லது விமானப் பயணம் போன்ற செயல்பாடுகளையோ பாதிக்கும் வகையில் இல்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும் ஜப்பானில் உள்ள அதிக செயல் தன்மை கொண்ட எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த எரிமலை, 2018 க்குப் பிறகு தற்போது (2025ஆம் ஆண்டு) மீண்டும் தனது செயற்பாட்டை ஆரம்பித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.Link

முந்தைய நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது இந்த வெடிப்பு மிதமானதாக இருந்ததாகவே கருதப்படுகின்றது. 2011 ஷின்மோடெக் வெடிப்பு 9 கிமீ (29,500 அடி) வரை சாம்பலை காற்றில் அனுப்பியது எனவும் இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


Read in English : Viral Image of Shinmoedake Eruption is AI-Generated, Though Volcano Did Erupt


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok | YouTube 

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஜப்பானில்  ஷின்மோடெக் எரிமலை வெடிப்பின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்பட்ட புகைப்படங்களில் 2 புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை என்பதுடன் ஒரு புகைப்படமானது 2018 ஆம் இதே ஷின்மோடெக் எரிமலை வெடித்து சிதறிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதுவும் கண்டறிப்பட்டது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ஷின்மோடேக் எரிமலை வெடிப்பின் புகைப்படங்களா இவை?

Fact Check By: Suji Shabeedharan  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *